திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு உட்பட்டது தூண்டுகை விநாயகர் கோவில். திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்ய வருகை தரும் பக்தர்கள் அனைவரும் முதலில் வணங்குவது தூண்டுகை விநாயகர் கோவிலை தான். இந்த கோவிலில் தரிசனம் செய்து விட்டு தேங்காய் உடைத்து விட்டு அதன் பிறகு தான் திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்வார்கள்.
இந்த தூண்டுகை விநாயகர் கோவிலில் கடந்த 2009 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பின் இன்று கோலாகலமாக நடந்தது.
கும்பாபிஷேகம் விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
கும்பாபிஷேக நாளான இன்று அதிகாலையில் நான்காம் கால யாக சாலை பூஜை தொடங்கியதை தொடர்ந்து மங்கள வாத்தியம், திருமுறை பாராயணம், அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், பஞ்சகவ்யம் பாத்திர பூஜை, மஹா கணபதி ஹோமம், ப்ரம்மசாரி பூஜை, கஜபூஜை, திரவ்யாஹூதி, பூர்ணாஹூதி நடந்தது.
தொடர்சியாக காலை 9 மணிக்கு கடம் புறப்பாடு நடந்தது. 9.15 மணிக்கு தூண்டுகை விநாயகர் கோவில் விமானத்துக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து தீபாரதனை நடந்தது.
தொடர்ந்து காலை 10.15 மணிக்கு தூண்டுகை விநாயகர் மூலஸ்தானத்துக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது.
கூடியிருந்த திரளான பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்க பட்டது அதன்பின்னர் மகா அபிஷேக தீபாரதனையும் நடந்தது. இதில் ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை திருச்செந்தூர் முருகன் கோயில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.


