Skip to content
நிகழ்வுகள்
235 – மாக்சிமினசு திராக்சு உரோமைப் பேரரசராக அறிவிக்கப்பட்டார்.
1602 – டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி அமைக்கப்பட்டது.
1616 – சேர் வால்ட்டர் ரேலி 13 ஆண்டுகள் இலண்டன் கோபுரத்தில் சிறைவாசத்திற்குப் பின்னர் விடுவிக்கப்பட்டார்.
1739 – நாதிர் ஷா தில்லியை கைப்பற்றி நகரைச் சூறையாடினான்.
1760 – அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் இடம்பெற்ற பெரும் தீ நகரில் 349 கட்டிடங்களைச் அழித்தது.
1815 – எல்பா தீவில் இருந்து தப்பிய நெப்போலியன் பொனபார்ட் 140,000 இராணுவப் படைகளுடனும் 200,000 தன்னார்வப் படைகளுடனும் பாரிசை மீண்டும் கைப்பற்றி “நூறு நாட்கள்” ஆட்சியை ஆரம்பித்தான்.
1854 – அமெரிக்காவின் குடியரசுக் கட்சி விஸ்கொன்சின் ரிப்போன் நகரில் ஆரம்பிக்கப்பட்டது.
1861 – மேற்கு அர்கெந்தீனாவில் இடம்பெற்ற நிலநடுக்கம் மெண்டோசா நகரை முற்றாக அழித்தது.
1864 – இலங்கையின் பிரபலமான கொள்ளைக்காரன் உத்துவான்கந்தை சூர சார்டீல் என்பவன் கேகாலை , மாவனெல்லையில் கைது செய்யப்பட்டான். பின்னர் 1964 மே 7 இல் தூக்கிலிடப்பட்டான்.[1]
1890 – செருமனியின் பிரதமர் ஒட்டோ ஃபொன் பிஸ்மார்க் பேரரசர் இரண்டாம் வில்லியமால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
1913 – சீனத் தேசியக் கட்சியின் நிறுவனத் தலைவர் சுங் சியாவோ-சென் கொலை முயற்சியில் காயமடைந்தார். இவர் இரண்டாம் நாள் உயிரிழந்தார்.
1915 – ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தனது பொதுச் சார்பியற் கோட்பாட்டை வெளியிட்டார்.
1922 – ஐக்கிய அமெரிக்கக் கடற்படையின் முதலாவது வானூர்தி தாங்கிக் கப்பல் லாங்லி சேவைக்கு விடப்பட்டது.
1933 – டேச்சு அரசியல் கைதிகள் முகாமை அமைப்பதற்கான கட்டளையை ரெய்க்ஸ் பியூரர் எஸ் எஸ் ஐன்றிச் இம்லர் விடுத்தார்.
1934 – சப்பானில் ஆக்கோடேட் என்ற இடத்தில் இடம்பெற்ற பெரும் தீ 4,170 சதுர கிலோ மீட்டர் நகரை அழித்தது, 2,165 பேர் உயிரிழந்தனர்.
1942 – போலந்தில் நாட்சி செருமனியரினால் கட்டாய வேலைக்குக் கொண்டு செல்லப்பட்ட 100 போலந்து நாட்டவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1942 – மேற்கு உக்ரேனில் ரொகார்ட்டின் நகரில் குழந்தைகள், பெண்கள் உட்பட 3,000 யூதர்கள் செருமனியப் படைகளால் கொல்லப்பட்டனர்.
1948 – சிங்கப்பூரில் முதலாவது தேர்தல் இடம்பெற்றது.
1956 – பிரான்சிடம் இருந்து துனீசியா விடுதலை பெற்றது.
1972 – வட அயர்லாந்து பெல்பாஸ்ட் நகரில் முதற்தடவையாக ஐரியக் குடியரசுப் படை கார்க் குண்டுத் தாக்குதலை நடத்தியது. ஏழு பேர் கொல்லப்பட்டனர், 148 பேர் காயமடைந்தனர்.
1987 – அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் எயிட்சுக்கு எதிரான சிடோவிடின் என்ற மருந்தை அறிமுகப்படுத்தியது.
1988 – எரித்திரியாவில் எரித்திரிய மக்கள் விடுதலை முன்னணியினர் அஃபபெட் நகரைக் கைப்பற்றினர்.
1990 – பெர்டினண்ட் மார்க்கோசின் மனைவி இமெல்டா மார்க்கோஸ் , கையூட்டு , கையாடல் , ஊழல் போன்ற குற்றங்களுக்கு விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.
1993 – இங்கிலாந்து , வெரிங்டன் நகரில் ஐரியக் குடியரசுப் படையின் குண்டுத்தாக்குதலில் இரு சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.
1995 – டோக்கியோவில் சுரங்கப் பாதை ஒன்றில் ஓம் சின்ரிக்கியோ என்ற மதக் கும்பல் நடத்திய நச்சு வாயுத் தாக்குதல் ஒன்றில் 13 பேர் கொல்லப்பட்டு 1,300 பேர் காயமடைந்தனர்.
2003 – ஈராக்கின் விடுதலை என்ற பெயரில் அமெரிக்கக் கூட்டு படைகளால் ஈராக் மீதான படையெடுப்பு ஆரம்பிக்கப்பட்டது.
2006 – கிழக்கு சாடில் 150 சாட் இராணுவத்தினர் போராளிகளால் கொல்லப்பட்டனர்.
2012 – ஈராக்கின் 10 நகரங்களில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல்களில் 52 பேர் கொல்லப்பட்டனர், 250 பேர் காயமடைந்தனர்.
2015 – வலய மறைப்பு , சம இரவு நாள் , பெருமுழுநிலவு அனைத்தும் ஒரே நாளில் நிகழ்ந்தன.
பிறப்புகள்
கிமு 43 – ஆவிட் , உரோமைப் புலவர் (இ. 17 )
1615 – தாரா சிக்கோ , முகலாய இளவரசர் (இ. 1659 )
1737 – முதலாம் இராமா , தாய்லாந்து மன்னர் (இ. 1809 )
1811 – பிரான்சின் இரண்டாம் நெப்போலியன் (இ. 1832 )
1828 – என்ரிக் இப்சன் , நோர்வே கவிஞர், இயக்குநர் (இ. 1906 )
1904 – பி. எப். ஸ்கின்னர் , அமெரிக்க உளவியலாளர் (இ. 1990 )
1906 – பாவெல் பெத்ரோவிச் பரெனாகோ , உருசிய-சோவியத் அறிவியளாளர், வானியலாளர் (இ. 1960 )
1920 – பெலிக்சு யூரியேவிச் சீகல் , சோவியத் வானியலாளர் (இ. 1988 )
1921 – பி. சி. அலெக்சாண்டர் , இந்திய அரசியல்வாதி (இ. 2011 )
1925 – டேவிட் வாரன் , ஆத்திரேலிய அறிவியலாளர், கண்டுபிடிப்பாளர் (இ. 2010 )
1940 – புலவர் அரசு , தமிழக எழுத்தாளர்
1940 – சி. பத்மநாதன் , இலங்கை வரலாற்றாளர், கல்வியாளர்
1942 – காமினி திசாநாயக்கா , இலங்கை அரசியல்வாதி (இ. 1994 )
1942 – முத்துலிங்கம் , கவிஞர், தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்
1944 – எர்வின் நேயெர் , நோபல் பரிசு பெற்ற செருமானிய உயிரி இயற்பியலாளர்
1945 – எர்லிங் பிராண்ட்நெஸ் , நோர்வே அரசியல்வாதி
1957 – இசுப்பைக் லீ , அமெரிக்க நடிகர், இயக்குநர்
1965 – வில்லியம் தால்ரிம்பில் , இசுக்கொட்டிய வரலாற்றாளர்
1966 – ஆல்கா யாக்னிக் , இந்தியப் பாடகி
1980 – கணேஷ் வெங்கட்ராமன் , தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
1986 – ரிச்சா கங்கோபாத்யாய் , இந்தியத் திரைப்பட நடிகை
1987 – கங்கனா ரனாத் , திரைப்பட நடிகை
1987 – அரிச்சரண் , தமிழ் திரைப்படப் பின்னணிப் பாடகர்
இறப்புகள்
1351 – முகம்மது பின் துக்ளக் , தில்லி சுல்தான் (பி. 1300 )
1726 – ஐசாக் நியூட்டன் , ஆங்கிலேய இயற்பியலாளர், கணிதவியலாளர், வானியலாளர், மெய்யியலாளர் (பி. 1642 )
1858 – ராணி அவந்திபாய் , இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை
1873 – வில்லியம் பிரைடன் , பிரித்தானியக் கிழக்கிந்திய இராணுவ அதிகாரி, மருத்துவர் (பி. 1811 )
1925 – கர்சன் பிரபு , பிரித்தானிய இந்தியாவின் 35வது தலைமை ஆளுநர் (பி. 1859 )
1943 – எயின்ரிச் ராபர்ட் சிம்மர் , செருமனிய வரலாற்றாளர், இந்திய ஆய்வாளர் (பி. 1890 )
1977 – சார்ல்ஸ் லிட்டில்டன் , நியூசிலாந்தின் 9வது ஆளுநர் (பி. 1909 )
2004 – யூலியானா , இடச்சு அரசி (பி. 1909 )
2008 – சோபன் பாபு , தென்னிந்தியத் திரைப்பட நடிகர் (பி. 1937 )
2010 – கிரிஜா பிரசாத் கொய்ராலா , நேப்பாளத்தின் 30வது பிரதமர் (பி. 1924 )
2013 – சில்லூர் இரகுமான் , வங்காளதேசத்தின் 15வது அரசுத்தலைவர் (பி. 1929 )
2014 – குஷ்வந்த் சிங் , இந்திய எழுத்தாளர் (பி. 1915 )
2015 – மால்கம் பிரேசர் , ஆத்திரேலியாவின் 22வது பிரதமர் (பி. 1930 )
2018 – ம. நடராசன் , தமிழக அரசியல்வாதி, இதழாசிரியர்
சிறப்பு நாள்
Continue Reading