தூத்துக்குடி விமான நிலையத்தில் இரவு நேர விமானங்கள் இயக்குவதற்காக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
தூத்துக்குடி விமான நிலையத்தில் புதிய உள்நாட்டு பயணிகள் முனையம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து சென்னை தூத்துக்குடி தூத்துக்குடி பெங்களூர் இடையே விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.இந்த நிலை இந்த விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தும் நடவடிக்கைகள் கடந்த சில ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பயணிகள் மனமானது ஆயிரம் சதுர மீட்டர் உள்ளது இதில் 80 பயணிகள் மட்டுமே வந்து செல்ல ஏதுவாக உள்ளது தற்போது புதிதாக 10 ஆயிரத்து 800 சதுர மீட்டர் பரப்பளவில் மேற்கொள்ள பட்டு வருகின்றன.
இதற்காக 600 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. மாற்றுவதற்காக விமான ஓடுபாதை 10 இடங்களில் நீட்டிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி விமான நிலையத்தில் சென்னை பெங்களூரில் போன்ற பெரு நகரங்களில் இருந்து விமானங்கள் இரவு நேரங்களில் வந்து செல்வதற்காக ஓடுபாதையில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன கடந்தது சில மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட இந்த பணி முடிவடைந்துள்ள நிலையில் தற்போது இந்த விமான ஓடுபாதையில் இரவு நேர மின் விளக்குகளை எரிய விட்டு விமானத்தை இயக்கி சோதனை நடத்தப்பட்டது.