தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட வாக்கு எண்ணும் மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாநகராட்சி தேர்தல் வாக்குப் எண்ணிக்கை மையமான வ.உ.சி. பொறியியல் கல்லூரியில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி, 3 நகராட்சிகள் கோவில்பட்டி, திருச்செந்தூர், காயல்பட்டிணம் அதுமட்டுமல்லாமல் 17 பேரூராட்சிகளிலும் வாக்குஎண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சியில் வ.உ.சி. பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் அவர்களால் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. வேட்பாளர்கள், பொதுமக்கள், பத்திரிகையாளர்கள் வருவதற்கு தேவையான வசதிகள் செய்து வாக்கு எண்ணிக்கை நடத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார். ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.