தமிழ்நாடு அரசு மருத்துவப் பணியாளர் தேர்வாணையத் (டி.என்.எம்.ஆர்.பி.) தேர்வில் நாசரேத் மர்காஷிஸ் பள்ளி முன்னாள் மாணவர் டாக்டர் முத்துக்குமார் மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
நாசரேத் வாழையடியைச் சேர்ந்த தவசிலிங்கப் பெருமாள்- ஜோஸ்பின்_மேரி தம்பதியரின்மூத்த மகன் முத்துக்குமார். இவர் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வி பயின்றார். தொடர்ந்து_முத்துக்குமார் மதுரை இராஜாஜி மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பில் (எம்.பி.பி.எஸ்.) பட்டம் பெற்றுள்ளார்.
இதைத் தொடர்ந்து கடந்த 25.01.2026 அன்று நடைபெற்ற எம்.ஆர்.பி. தேர்வில் தேர்ச்சி பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார். சாதனை படைத்த முத்துக்குமாரைதூத்துக்குடி தெற்கு மாவட்ட ம.தி.மு.க. செயலர் வே.ரஞ்சன் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து பாராட்டினார். தூத்துக்குடி மாவட்ட மதிமுக முன்னாள் தலைவர் குரு.மத்தேயு ஜெயசிங், ஆழ்வை ஒன்றிய மதிமுக செயலர் ஜெயக்கொடி ச.அரிகரன்,மதிமுக பொதுக்குழு உறுப்பினர் இரா.மோகன்சிங் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்த னர்.
முத்துக்குமாரின் தந்தை தவசி லிங்கப் பெருமாள் வாழையடி மெயின் ரோட்டில் மளிகை கடை வைத்துள்ளார். “தன்னுடைய கடினமான உழைப்பால் தான் முதலிடம் பெற்றுள்ளதாக” முத்துக்குமார் கூறினார்.
மேலும் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் குணசீலராஜ், டாக்டர் முத்துக்குமாருக்கு பரிசு வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி கனிணி ஆசிரியர் செல்வின் பொன்ராஜ், ஆங்கில பட்டதாரி ஸ்டீபன் பிரேம் குமார் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்


