கலையரசன் என்பவர் தமிழ் திரைப்பட நடிகராவார். இவர் பிரபல திரைப்பட இயக்குனர்களான மிஷ்கின் மற்றும் பா. ரஞ்சித் அவர்களுடையப் படங்களில் துணை நாயகனாக நடித்துள்ளார். அதிலும் மெட்ராஸ் திரைப்படத்தில் இவருடைய நடிப்பு பாரட்டப்பட்டது. ராஜா மந்திரி, டார்லிங் 2 ஆகிய படங்களில் நாயகனாக நடித்துள்ளார்.


