நாணல்காடு_அகரம்_உத்தமபாண்டியன்குளம்_அரசுபோக்குவரத்துநகர் ஆகிய ஊர்கள் தூத்துக்குடி, திருநெல்வேலி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த ஊர்களில் நாணல்காடு மற்றும் அகரம் கிராமங்கள் தூத்துக்குடி மாவட்டத்திலும், உத்தமபாண்டியன்குளம் மற்றும் அரசு போக்குவரத்துநகர் ஆகிய கிராமங்கள் திருநெல்வேலி மாவட்டத்திலும் அமைந்துள்ளது.
மேற்ப்படி கிராமத்தில் தலா 300 முதல் 500 வீடுகள் வரை உள்து. இங்கு வாழ்ந்து வரும் மக்கள் கல்வி, வேளை, மருத்துவம் என அனைத்திற்க்கும் பெரும்பாலும் நெல்லை மாவட்டத்தையே சார்ந்துள்ளார்கள்.
மேற்ப்படி கிராமத்தின் வழியாக தான் திருநெல்வேலி முதல் தூத்துக்குடி வரையிலான பேருந்து போக்குவரத்தும் நடைபெறுகிறது, இருந்த போதிலும் இந்த கிராமங்களில் கிராமபுறங்களுக்கு இயக்கப்படும் ஒரு சில நகர பேருந்துக்கள் தவிர மற்ற எந்த பேருந்துக்களும் நிற்ப்பதில்லை. கிராம புறங்களுக்கு இயக்கப்படும் ஒரு சில பேருந்துக்களும் குறிப்பிட்ட நேரத்திற்க்கு மட்டுமே இயக்கப்படுவதால் மேற்கூறிய கிராம மக்கள் மற்றும் சிறுவர் சிறுமியர், பெண்கள், வயதானவர்கள், உடல் நலம் குன்றியவர்கள் என அனைவரும் பள்ளி கூடம், கல்லூரி, வேலைக்கு, மருத்துவமனைக்கு செல்ல பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். மேலும் இவ்வூர்களில் நின்று செல்லும் குறிப்பிட்ட சில பேருந்துக்களில் அதிக மக்கள் பயணிப்பதால் கூட்டம் அதிகமாகி மக்கள் படிகட்டுகளில் நின்று ஆபத்தான முறையில் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.
இந்த வழி தடத்தில் இரண்டு பேருந்துக்கள் மட்டுமே இடை நில்லா பேருந்தாக இயங்க அரசிடம் முறையாக அனுமதி பெற்றுள்ளது. மற்ற அனைத்து பேருந்துக்களும் அனைத்து நிறுத்தங்களிலும் நின்று பயணிகளை ஏற்றி ,இறக்கி செல்ல வேண்டும் என்றும் விதிமுறைகளை மீறும் அதிகாரிகள், பேருந்து ஒட்டுநர் மற்றும் நடத்துனர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடதக்கது.
ஆனால் நீதிமன்ற உத்தரவை காற்றில் பறக்கவிட்ட போக்குவரத்து துறையினர் விதிமீறலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
எனவே மேற்ப்படி கிராம மக்கள் அனைவரும் தங்கள் கிராமத்தில் அனைத்து பேருந்துக்களும் நின்று செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிருத்தி அனைத்து மக்களும் கையெழுத்திட்டு நெல்லை KTC நகரில் உள்ள மண்டல அலுவலகத்தில் மனு அளிக்க உள்ளார்கள். அதன் பிறகும் நடவடிக்கை இல்லை என்றால் போராடவும் முடிவுசெய்துள்ளார்கள்.
,


