கன்னியாகுமரி செல்வதற்காக தூத்துக்குடி விமான நிலையம் வருகை தந்த ஆளுநர் ஆர்என் ரவிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். அவரை விமான நிலையத்தில் தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், புத்தகம் வழங்கி வரவேற்றார். பின்னர் ஆளுநர் கார் மூலம் கன்னியாகுமரிக்கு புறப்பட்டு சென்றார். இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தூத்துக்குடி- பாளையங்கோட்டை ரோட்டிலும் முக்கிய சந்திப்புகளில் போலீசார் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


