தூத்துக்குடியில் சிஎஸ்கே – TDCA சுழற்கோப்பைக்கான பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான டி-20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது.
தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் சங்கம் மாவட்டத்தில் பல இளம் கிரிக்கெட் வீரர்களை உருவாக்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக மாதந்தோறும் பல கட்டங்களாக கிரிக்கெட் போட்டிகளை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக 16 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது.
மிளவிட்டான் டிலைட் பப்ளிக் பள்ளியில் வரும் 23ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியை மாவட்ட கிரிக்கெட் சங்கம் தலைவர் ஆல்பர்ட் முரளிதரன் தலைமையில், செயலாளர் கிறிஸ்பின், பொருளாளர் கணேஷ் குமார் ஆகியோர் முன்னிலையில், டிலைட் பப்ளிக் பள்ளி முதல்வர் சோபியா செல்வராணி, தாளாளர்பிரபாகரன் ஜான், சேர்மன் ஜெயசீலன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர். வெற்றி பெறும் அணிக்கு23ஆம் தேதி மாலை CSK-TDCA Trophy 2026 சுழற்கோப்பை மற்றும் பரிசுகள் வழங்கப்படும். தொடக்க விழாவில் டோர்னமன்ட கமிட்டிரொனால்ட் ராஜேஷ், டோர்னமன்ட மேற்பார்வையாளர் மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.


