ஸ்ரீவைகுண்டத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்பு வாரச்சந்தை நடந்து வந்துள்ளது. சுற்றுவட்டாரப்பகுதிகளான வெள்ளூர், கால்வாய், புதுக்குடி, ஆழ்வார்தோப்பு, பத்மநாபமங்கலம், தோழப்பண்பண்னை, கொங்கராயகுறிச்சி, ஆறாம்பண்ணை, மணக்கரை, இசவன்குளம், பேட்மாநகரம், பேரூர், நளராஜபுரம், பேட்துரைச்சாமிபுரம் சேர்ந்த மக்கள் அனைவரும் பயனடைந்து வந்தனர்.
பல்வேறு காரணங்களால் வாரச்சந்தை நடைபெறவில்லை. இதனால் கிராம மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டனர். இதனால் செய்துங்கநல்லூர், ஏரல், பேய்க்குளம், சாத்தான்குளம் பகுதிகளில் நடைபெற்று வரும் வாரச்சந்தையில் மக்கள் பொருட்கள் வாங்கி வருகின்றனர்.
ஸ்ரீவைகுண்டத்தில் வாரச்சந்தை அமைக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் 20 ஆண்டுகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் வட்டாச்சியர் தாமஸ் பயஸ் அருள் தலைமையில் பேரூராட்சி செயல் அலுவலர் (பொ) மணிமொழியன், ரெங்கசாமி, வருவாய் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் ஸ்ரீவைகுண்டத்தில் வாரச்சந்தை அமைப்பதற்காக சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு செய்தனர். இதனால் இப்பகுதி மக்களும், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.