கொரோனா தொற்று நோய் பரவல் காரணமாக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு சேரகுளம் அருகே உள்ள அரசர்குளம் செல்லும் பேருந்து நிறுத்தப்பட்டு விட்டது. கொரோனா பரவல் குறைந்த பிறகு அந்த பேருந்து இராமனுஜம்புதூருக்கு அனுப்ப பட்டது. ஆனால் அந்த பேருந்து காலை 5 மணிக்கு அரசர்குளம் வருகின்ற தடவை மட்டும் அரசர்குளம் செல்ல வில்லை. இதுகுறிததுபல முறைபுகார் செய்தும் நடவடிககை இல்லை.
இதற்கிடையில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு வண்ணார்பேட்டை அரசு போக்குவரத்து கழகத்தில் உள்ள வணிக மேலாளர் சசிகுமார் அவர்களை சந்தித்து மனு கொடுத்தார். அதிகாலையில் அந்த பஸ் இன்றி அரசர்குளம், வல்லகுளம் , வல்லகுளம் ஏ.டி காலனி மக்கள் பாதிக்கப்படுவதை எடுத்து கூறினார். எனவே இந்த மனுமீது நடவடிக்கை எடுத்த வணிகமேலாளர் சசிகுமார் உடனடியாக அசரர்குளத்திற்கு அதிகாலையில் பேருந்து சென்று வர அறிவுருத்தப்பட்டது. அதன் படி இன்று காலையில் அரசர்குளத்துக்கு பஸ் சென்றது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதற்கான நடவடிக்கை எடுத்த வணிகமேலாளர் சசிகுமார் அவர்களுக்கும் நடவடிக்கை எடுத்த அனைவருக்கும் அரசர்குளம் வல்லகுளம் கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.


