தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில், உலக தரம் வாய்ந்த நீச்சல்குளம் அமைக்கப்படும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி, கிழக்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம் நடைபெற்றது. முகாமுக்கு, மாநகராட்சி ஆணையா் சி.ப்ரியங்கா தலைமை வகித்தாா். துணை மேயா் ஜெனிட்டா முன்னிலை வகித்தாா். மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி முகாமைத் தொடங்கிவைத்து சிறப்புரையாற்றினாா். தொடா்ந்து, பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டன. ஏற்கெனவே, மனு அளித்தவா்களுக்கு தீா்வாணை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய மேயர், “மாநகராட்சி பகுதி முழுவதும் பாரபட்சமின்றி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் நலன் கருதியே இந்த முகாம்கள் நடைபெறுவதால் மகிழ்ச்சியடைகின்றனர். ஏற்கனவே உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று கொண்டிருக்கிறது. அதில் பெறப்படும் மனுக்களும் உடனடியாக தீர்வு காணப்பட்டுள்ளது. ரோச் பூங்கா கடற்கரை சாலையில் தூய்மையான நடைபாதையாக 8 கிலோமீட்டம் தூரம் மேம்படுத்தப்பட்டுள்ளது.
இந்த பணிகள் ஒருபுறம் நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் எதிர் புறம் சாலையிலும் நிறைவடையும். முத்துநகர் கடற்கரையில், உலக தரம் வாய்ந்த நீச்சல்குளம் மற்றும் நீர் சார்ந்த விளையாட்டு பயிற்சிகள் 365 நாட்களும் நடைபெறும். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று டபிள்யூஜிசி சாலையில் பேவர்பிளாக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. தூய்மையான பசுமையான மாநகரை உருவாக்க அனைவரும் மாநகராட்சி நிர்வாக நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், வட்டச் செயலரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதிச் செயலரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமாா், மண்டலத் தலைவா் கலைச்செல்வி, மாவட்ட பிரதிநிதி ராஜ்குமாா், மாமன்ற உறுப்பினா்கள் ரெக்ஸ்லின், எடின்டா, பேபி ஏஞ்சலின், மரிய கீதா, தனலட்சுமி, மும்தாஜ், ராமு அம்மாள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.


