1, 1925-ல் சுமார் 10 குடும்பங்கள் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டு சபையில் இருந்தனர். 1935-ல் அதிகாரங்களில் உள்ள சமுதாய மக்கள் விசுவாசிகளை மிரட்ட ஆரம்பித்தனர். இதில் பல குடும்பங்கள் பின் வாங்கிப் போயின. இதனால் அன்றைய ஊழியர்களுக்கு சபையை நடத்துவது மிகவும் சிரமமாக இருந்தது. அந்நாட்களில் திரு. S.ஆசீர்வாத நாடார், S.ஏசுவடியான், திரு. புலவர் ஆகியோரது குடும்பங்கள் சபை ஊழியரோடு இணைந்து சபை மூடாமல் ஆராதனை தொடர்ந்து நடைபெறுவதற்கு உறுதுணையாக இருந்தனர். சில வருடங்களுக்கு பின்பு ஒவ்வொரு குடும்பங்களாக கர்த்தருடைய கிருபையால் சபையில் இணைந்தனர். சபை வளர ஆரம்பித்தது
2.1947 வரை ஆலயத்தோடு இணைந்து பள்ளிக்கூடமும், வேகமாக வளர ஆரம்பித்தது. 1947-ல் கிராமத்தின் சிறு சிறு மத மோதல்கள் உருவானது. அது படிப்படியாக வளர்ந்து சில ஆண்டுகளில் கிறிஸ்தவ பள்ளிக்கூடத்தில் மற்றப் பிள்ளைகளை சேர்க்க கூடாது என்று பெற்றோர்களிடத்தில் ஒரு குழுவினர் பேசியும், மிரட்டியும் அவர்களுடைய பிள்ளைகளை வேறு பள்ளிகூடங்களுக்கு மாற்றிக்கொண்டு போய்விட்டனர். மிகவும் குறைவான பிள்ளைகளை வைத்துக் கொண்டு ஒரு வருட காலமாக பள்ளியைத் தொடர்ந்து நடத்துவதற்கு சபையாரும், நிர்வாகமும் கிராம மக்களிடம் பேசி பல முயற்சிகளை எடுத்தனர். ஆனால் அதற்கு பலன்கிடைக்கவில்லை. குறிப்பிட்ட பிள்ளைகள் பள்ளிகூடத்தில் இல்லாததால் அரசங்கம் பள்ளிகூடத்தை மூடிவிட்டது. வேகமாக வளர்ந்து வந்த சபை மக்களுக்கு கிராமத்தில் ஏற்பட்ட மத மோதல்கள், பள்ளிக்கூடம் மூடல் ஆகியவற்றால் சோர்ந்து போயினர். கர்த்தர் தம்முடைய சபையைத் தாங்கினார். மறுபடியும் சில ஆண்டுகளில் தேவன் தமது சபையை வளரச் செய்தார்.
3.1965-ல் இருந்து சபை மக்கள் உற்சாகமாக பொருட்காணிக்கைகள், நன்கொடைகள் சேகரித்து ஆல்டர் மண்டபம் என்று ஆலயத்தின் கட்டுமான பணிகளை செய்ய முயற்சித்தனர். தொடர்ந்து ஆலயத்திற்கு தேவையான பொருட்களை வாங்க ஆரம்பித்தனர். ஆலயத்திற்கு ஒலிபெருக்கி வாங்க முயற்சி எடுத்தனர். கர்த்தருடைய கிருபையால் 1.4.1981-ல் ஒலிபெருக்கி வாங்கி REV. G.D.கோயில் பிச்சை அவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டு தேவனுடைய நாமத்திற்கு மகிமையாக ஆராதனைகள். பாடல்கள். செய்திகள் ஒலி பரப்பப்பட்டன. சபையார் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். யாரும் எதிர்பாராத விதமாக 30.11.1981 இரவு கொள்ளையர்களால் ஆலயம் கொள்ளையடிக்கப்பட்டது. குறிப்பாக ஒலி பெருக்கி சாதனங்கள் அனைத்தும் களவு போய் மின் சாதனங்கள் அனைத்தும் களவு போய்விட்டது. சபையார் பெரும் அதிர்ச்சியடைந்தனர். சபையார் சோர்ந்து போயினர் கர்த்தர் தமது ஜனங்களைத் தைரியப்படுத்தி உற்சாகபடுத்தினார். மறுபடியும் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்தனர்.
4. கர்த்தருடைய ஆலயத்தில் ஊழியம் செய்து சபையாரை விசுவாசத்தில் வளர பெரும் முயற்சி எடுத்தவர் சபை ஊழியர் A.ராஜமணி ஆசிரியர். அவர்கள் சபையார் கிராமத்தினர் சுற்றி உள்ள கிராம மக்கள் தங்களின் பிரச்சனைகளை சொல்லி ஜெபிக்கவும், வியாதியஸ்தர்களுக்காக ஜெபிக்கவும், பிசாசின் பிடியில் அகப்பட்டவர்களின் விடுதலைகாக ஜெபிக்கவும். ஆலயத்தில் வந்து ராஜமணி ஆசிரியரிடம் ஜெபிப்பதை வழக்கமாக வைத்திருந்தனர். 1994 செப்டம்பர் 27 அன்று ராஜமணி ஆசிரியர் மகள் R.ஜான்ஸி நேசம் வயது 20 வாலிப வயதில் சிறுநீரக கோளாறு காரணமாக திடீரென்று மரித்து போனாள். இந்த சம்பவம் சபையாருக்கும் கிராமத்துக்கும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. சபையார் பயத்தோடு. ஒரு விதமான சோர்வுக்கு உள்ளாகினர். கர்த்தருடைய கிருபையால் ஆவியானவர் சபையாரை மறுபடியும் உற்சாகப்படுத்திப் பெலப்படுத்தினார். சபை சில ஆண்டுகளில் மறுபடியும் வளர ஆரம்பித்தனர்.
5.கர்த்தருடைய கிருபையால் 2000தில் மே மாதம் 5ம் தேதி முதன்முதலாக நமது ஆலயத்தில் அசன பண்டிகை கொண்டாட ஆராம்பிக்கப்பட்டது. மே மாதம் 5-ஆம் தேதி மாலை 6 மணிக்கு அசனம் நடைபெற்றது. சபையார் எதிர்பார்த்ததை விட ஜனங்கள் திரளாய் கூடி வந்தனர் ஆயத்தம் பண்ணிய ஆகாரங்கள் விரைவாய்த்தீர்ந்து போயின. சபையாருக்கு பெரும் மகிழ்ச்சி. நமது சபையில் அசன சாப்பாடு சாப்பிட இவ்வளவு ஜனங்கள் வருவார்கள் என எதிர்பார்க்கவில்லை. ஆகையால் சபையார் அசன பண்டிகை மீது சிறப்பு கவனம் செலுத்தத் தொடங்கினர். சுற்றிலும் உள்ள 10 கிராம சபை மக்களும் 7 மக்களும் கூட்டி வந்து அசன உணவு சாப்பிட்டு மகிழ்ந்தனர். ஒவ்வொரு வருடமும் மக்களின் வருகை பெருகிக்கொண்டே இருந்தது. காரணம் ஆயை வளாகத்தில் உள்ள இடவசதி, அமைதியான சூழ்நிலை. சமாதானத்தோடும் மகிழ்ச்சியோடும் வருகிறவர்களை சபையார் வரவேற்கும் விதமும், தேவனுடைய பிரசன்னமும், தேவாலயத்தின் மகிமை ஜாதி, மத பாகுபாடுகளைக் கடந்து குடும்பம் குடும்பமாக வந்து அசன உணவு உண்டு தேவ ஆசீர்வாதம் பெறுவதற்கு வசதியாக இருந்தது. சபையின் ஐக்கியம் வளர்ந்தது. ஆலயத்தில் அசனம் சிறப்பாக நடைபெறுவதை ஏற்றுக்கொள்ள முடியாத சிலர் 2014 ஆம் ஆண்டில் அசனம் பண்டிகை ஆரம்ப நாளில் உள்ளூர்காரர், வெளியூர்காரர் என்ற பிரச்சனையை எழுப்பி சிலரை தாக்கி சிலர் மீது காவல்நிலையத்தில் பொய் புகார் கொடுத்தனர். அசனம் அமைதியாக நடைபெற முடியாதபடிக்கு கிராமத்திற்குள் கிறிஸ்தவ ஆலயத்தில் கலவரம், அசன பண்டிகையில் பிரச்சனை என்ற செய்திகளை ஜனங்கள் மத்தியில் பரப்பிவிட்டனர். கர்த்தருடைய பெரிதான கிருபையாலும், காவல்துறை அதிகாரிகளின் தயவினாலும், சபையில் சேராத கிராமத்தின் வளர்ச்சியில் அக்கறை கொண்ட ஊர் மக்களின் ஒத்துழைப்பாலும் ஒருவிதாமான பதற்றத்தோடு 2014 ஆம் ஆண்டின் அசனம் நடந்து முடிந்தது. அதன் பிறகு குடும்பம் குடும்பமாக அசனத்திற்கு வருகை தரும் சுற்றுபுற மக்களின் வருகை குறைய ஆரம்பித்தது. இன்று வரையிலும் ஆலயத்தில் பிரிவினை, கலவரம் என்று துர்ச்செய்தியை ஒரு சிலர் கிராமத்தில் பரப்பி வந்தாலும் கர்த்தருடைய பிள்ளைகள் ஆலயத்தில் பிரச்சனை இல்லை கலவரம் இல்லை நாங்கள் ஒரே குடும்பமாக .இருக்கிறோம் என்று சொல்லி நற்செய்தியை அறிவித்து மறுபடியும் கர்த்தருக்கு மகிமையாக ஐக்கியத்தின் அடையாளமாக எழுந்து நிற்கிறோம். மறுபடியும் சபை வளர்ந்து வருகிறது.
6.2017-ல் கிறிஸ்மஸ் கிரிக்கெட் போட்டி என்று சுமார் 22 ஊர் இளைஞர்களை சேர்த்து புது விளையாட்டு மைதானம் அமைத்து சபை மற்றும் ஊர் பெரியவர்களை இணைந்து கிரிக்கெட் மைதானத்தில் கிறிஸ்மஸ் கேக் வெட்டி ஜெபித்து பரிசுகள் கொடுத்து தொடர்ந்து 3 வருடங்களாக கிறிஸ்துமஸ் காலத்தில் மிகவும் சிறப்பாக கிறிஸ்துவின் பிறப்பை விளையாட்டின் மூலமாக விளையாட்டு வீரர்களுக்கு அறிவிக்கப்பட்டது. இப்படி சபை வாலிபர்கள் சபை ஒற்றுமையாக விளையாட்டுப் போட்டி நடத்தியது, மற்ற ஊர்காரர்கள் கருங்குளம் மேலூர் சபை பெரிய சபையாக இருக்கிறதே! என்று நினைக்கும் வண்ணம் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை தொடர்ந்து நடத்த விடாமல் செய்வதற்காக சிலர் மாற்று சமுதாய மக்களை விளையாட்டு மைதானத்தின் மீது உரிமை கொண்டாட தூண்டி விட்டனர். இந்த பிரச்சனை காவல்நிலை அதிகாரி தாசில்தார் ஆகியோர் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு கால அட்டவணை கொடுக்கப்பட்டு குறிப்பிட்ட நாட்களில் அணியினர் விளையாடிக் கொள்ள அனுமதி அளித்தனர். மிகுந்த நெருக்கடியின் மத்தியில் கிரிக்கெட் போட்டி 2010-ல் நடத்தி முடிக்கப்பட்டது.
7.2020-ல் உலகமெங்கும் ஏற்பட்ட கொரோனா என்ற கொள்ளை நோயினால் ஆலயங்கள் மூடப்பட்டன. ஆராதனைகள் நிறுத்தப்பட்டன. மாதக்கணக்கில் ஆலயம் செல்ல முடியாமலும் ஆராதனை நடத்த முடியாமலும் ஜனங்கள் வீடுகளில் முடங்கி கிடந்தனர் சபையார் விசுவாசத்திலும் பொருளாதாரத்திலும் மிகவும் பின்வாங்கிப் போயினர். சோர்ந்து போய் இருந்த சபையை மறுபடியும் எழுப்புவதற்காக 2020 மே 5-ல் அதோடு சபையாரின் வீடுகளுக்கே சென்று அவர்களுக்காக ஜெபித்து திருவிருந்து கொடுத்து குருவானவர் தைரியப்படுத்தி உற்சாகபடுத்தினார். ஆலய பிரதிஷ்டை ஆராதனையை ஆலயத்தில் பொதுமக்கள் இன்றி சேகர குருவானவர் S.இம்மானுவேல் அற்புதகுமார் அவர்கள் ஒலி பெருக்கியின் மூலமாக ஆராதனை நடத்தினார்கள். வீடுகளில் இருந்து ஆராதனையோடு இணைந்து தேவனை மகிமைபடுத்தி ஜனங்கள் மகிழ்ந்தனர். அதோடு சபையாரின் வீடுகளுக்கே சென்று அவர்களுக்காக ஜெபித்து திருவிருந்து கொடுத்து குருவானவர் தைரியபடுத்தி உறசாககடுத்தினார். இந்த செயல் சபையாரை மறுபடியும் உற்சாகம் அடைய செய்தது. கர்த்தருடைய கிருபையால் கொரோனா நோயும் விலகி ஆலயம் திறந்து ஆராதனைகள் வழக்கம் போல நடைபெற ஆரம்பித்தது.


