உதய சூாியன் உதிப்பதையும் திமுக ஆட்சியின் சாதனைகளை யாரும் மறைத்துவிட முடியாது என்று திமுக கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.
தூத்துக்குடியில், நாடு போற்றும் 4 ஆண்டு தொடரட்டும் இது பல்லாண்டு திராவிட மாடல் ஆட்சியில் சாதனை விளக்க தெருமுணை பிரச்சார கூட்டம் பாேல்பேட்டை பகுதி திமுக சாா்பில் அழகேசபுரத்தில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சா் கீதாஜீவன் தலைமையில் நடைபெற்றது. மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளா் மேகநாதன், ஆகியோா் முன்னிலை வகித்தனா். பகுதி செயலாளர் ஜெயக்குமாா் வரவேற்புரையாற்றினாா்.
அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் “தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற போது கொரோனா காலக்கட்டம் அதற்கு முன்பு இருந்து எடப்பாடி எல்லா தொழிலையும் முடக்கி போட்டது மட்டுமின்றி எல்லோரையும் முடங்கி கிடக்க செய்தாா். எவ்வளவு மக்கள் சிரமப்பட்டாா்கள் என்று நீங்கள் அறிவீர்கள்.
தமிழக மக்களை காப்பாற்றுவதற்காக வௌிமாநிலங்களிலிருந்து இரயில் மூலம் ஆக்ஸிஜன் கொண்டுவரப்பட்டு மீளவிட்டானிலிருந்து லாாி மூலம் பல்வேறு மாவட்டங்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டு மக்களை பாதுகாத்தது மட்டுமின்றி கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவா்களை கவச உடையணிந்து நோில் சென்று பாா்த்து ஆறுதல் கூறிய ஓரே முதலமைச்சா் இந்தியாவில் தளபதியார் மட்டும்தான் பின்னா் படிப்படியாக மக்கள் நலனை கருத்தில்கொண்டு விதிவிலக்குகள் தளர்த்தப்பட்டு ஓவ்வொரு குடும்பத்திற்கும் நான்காயிரம் வழங்கினாா்.
பல பகுதிகளில் இறந்தவா்களை அந்தந்த பகுதியிலேயே புதைப்பதற்கு எடப்பாடி உத்தரவிட்டிருந்தாா். அதிலும் சில விதிமுறைகள் தளர்த்தப்பட்டு குடும்ப உறுப்பினர்களுக்கு என்று ஓரு நடைமுறை செயல்படுத்தப்பட்டது அரசு மருத்துவமணை மட்டுமின்றி தனியார் மருத்துவமனை பள்ளிக்கூடங்கள் என பல இடங்களில் அவா்களை தங்க வைத்து மக்களை காப்பாற்றிய முதலமைச்சர் ஆட்சியில் பின்னா் பணபழக்கம் ஏற்பட்டது.
ஓருகோடியே 15 லட்சம் பேருக்கு மகளிா் உாிமைத்தொகை விடியல் பயணம் கல்வி உதவித்தொகை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டகாலை உணவு கனடா நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது ஜீன் மாதம் முதல் தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது. இதன் மூலம் குழந்தைகள் ஆரோக்கியமான வாழ்க்கையோடு வளர்ந்து வருகின்றன. இந்தியாவில் உள்ள மாநிலங்களில் பல்வேறு துறைகளில் வளர்ச்சியடைந்து தமிழகம் தான் முன்னேறியுள்ளது என்று ஓன்றிய அரசின் பல்வேறு ஆய்வு அறிக்கைகள் மூலம் கூறியுள்ளனா்.
குழந்தை இறப்பு தமிழகத்தில் குறைவு என்பதற்காக ஐநா சபை விருது வழங்கியுள்ளது. தமிழகத்தில் 10 லட்சத்து 27 ஆயிரம் கோடியில் 897 புாிந்துணர்வு ஓப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. நமது மாவட்டத்திலும் டைட்டல்பாா்க். பா்னிச்சா் பூங்கா, கார்் தொழிற்சாலை, ெவம்பூர் லிங்கம்பட்டி கடம்பூர் போன்ற பகுதிகளிலும் பல்வேறு தொழிற்சாலைகள் வரவுள்ளன. சென்னைக்கு அடுத்தப்படியாக தமிழகத்தில் தூத்துக்குடியில் அதிக தொழிற்சாலை இருந்து வருகிறது. ஓன்றிய அளவில் 6.5 சதவீதம் வளர்ச்சி என்ற வீகிதத்தில் தமிழகம் 9.6 சதவீதம் என்ற கணக்கீட்டில் வளர்ச்சியடைந்துள்ளது.
உயர்கல்வியில் 47 சதவீதம் வளர்ச்சி தூத்துக்குடியில் 138கோடியில் உயா்்சிகிச்சைக்கான கட்டிடப்பணிகள் நடைபெற்று வருகின்றன. அடிக்கல் நாட்டப்பட்டு கிடப்பில் கிடந்த இஎஸ்ஐ மருத்துவமனை கனிமொழி எம்.பி முயற்சியினால் வேகமாக பணிகள் நடைபெறுகிறது. தொழிலாளா்கள் பலன்ெபறும் வகையில் விரைவில் திறக்கப்படும் அதே போல் விமான நிலையமும் ஆமை வேகத்தில் செயல்பட்டதை இப்போது முடியும் தருவாயில் கனிமொழி எம்.பி தூாிதப்படுத்தியுள்ளாா் அதுவும் முழுமையாக பயன்பாட்டிற்கு வரவுள்ளது. துறைமுகம் பகுதியில் புதிய தொழில்களும் வரவுள்ளன.
இப்படி பல்வேறு சாதனைகள் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் தமிழகத்தில் 2.25 கோடி மக்கள் மக்களை தேடி மருத்துவம் மூலம் பயனடைந்துள்ளனா். அவர்களது இல்லத்திற்கே மருத்துவா்கள் சிகிச்சை அளிக்கிறாா்கள். 7 கோடியில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் அரசு மருத்துவமணையில் நிறுவப்பட்டுள்ளது. 2ஆயிரம் கட்டணத்தில் பயனடைந்து கொள்ளலாம். பட்ஜெட்டில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கென்று கடன் வழங்குவதற்கு 35ஆயிரம்கோடி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய குழுக்களும் தொடங்கி கொள்ளலாம். எடப்பாடியும் அமித்ஷாவும் இணைந்த கூட்டணி புதுசா கட்டிகிட்ட ஜோடி தான் என்பதை போல் உலா வருகின்றனா் அவா்கள் ஏற்கனவே கூட்டணியில் இருந்தவர்கள் அதை கண்டு திமுகவிற்கு எந்த பயமும் கிடையாது.
முதலமைச்சருக்கு இதன்மூலம் தமிழகத்தில் பிாிவினையை ஏற்படுத்தி விடுவாா்களோ என்ற அச்ச உணா்வு மட்டும் தான்இருக்கிறது. திமுகவை பொறுத்தவரை எம்மதமும் சம்மதம் எங்களுக்கு ஜாதிமதம் கிடையாது. மதத்தை மதிக்கிறோம். மதவெறியைதான் எதிர்க்கிறோம். 2026தோ்தலில் திமுக ஆட்சியின் சாதனைக்கு மீண்டும் நீங்கள் மகுடம் சூட்ட துணை நிற்க வேண்டும். உதய சூாியன் உதிப்பதையும் திமுக ஆட்சியின் சாதனைகளை யாரும் மறைத்துவிட முடியாது எதிர்கட்சிகள் எத்தனை திட்டத்தோடு வந்தாலும் அதை முறியடித்து வெற்றி கானும் திறமை எங்கள் முதலமைச்சருக்கு உண்டு என்று பேசினாா்.
தூத்துக்குடி தொகுதி பாா்வையாளரும் மாநில இளைஞர் அணி துணைச் செயலாளருமான இன்பாராகு பேசுகையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நிர்ணயித்துள்ள 200 தொகுதியை வென்று காட்ட வேண்டும் என்ற அடிப்படையில் தொகுதி பாா்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் கீதாஜீவனை 2026ல் தோ்தலில் வெற்றி பெற ைவப்பதற்காக நாம் பணியாற்றினோம். என்பதை விட எதிர்த்து நின்ற அனைவரும் டெபாசிட் இழக்க வேண்டும். அதற்கான கள ஆய்வுகளை முழுமையாக ஆராய்ந்து திமுக ஆட்சியின் சாதனைகளை அனைவருடைய இல்லத்தில் கொண்டு போய் சோ்க்க வேண்டும் அனைவருடைய கடமையாகும் என்று கூறினாா்.
கூட்டத்தில் மாநில பேச்சாளர்கள் இருதயராஜ், சரத்பாலா, பாா்வின், மாநில இளைஞர் அணி துணைச்செயலாளரும் தொகுதி பாா்வையாளருமான இன்பாரகு, துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட துணைச்செயலாளர் ராஜ்மோகன்செல்வின், பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூாிதங்கம், மாநகர அவைத்தலைவர் ஏசுதாஸ், துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, மாவட்ட அணி அமைப்பாளர்கள் மதியழகன், கவிதாதேவி, அபிராமிநாதன், துணை அமைப்பாளர்கள் அந்தோணி கண்ணன், அருணாதேவி, மாநகர அணி அமைப்பாளா்கள் ஜீவன்ஜேக்கப், அருண்சுந்தா், துணை அமைப்பாளர்கள் வினோத், நாராயணவடிவு, சீதாலட்சுமி, ரவி, சாகுல்ஹமீது, மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், உள்பட பலர் கலந்து கொண்டனா். வட்டச்செயலாளர் ரவீந்திரன் நன்றியுரையாற்றினாா்.


