வல்லநாடு சிவன் கோவிலுக்கு ஆதியோகி சிவன் ரதம் வருகை தந்தது. ஈஷா யோகா மையத்தின் சார்பில் மகா சிவராத்திரியை முன்னிட்டுத் தமிழகம் முழுவதும் ஆதியோகி சிவன் ரதம் அனைத்து ஊர்களுக்கும் ஊர்வலமாக வருகிறது.
இதன்படி வல்லநாடு அருள்மிகு ஆவுடை அம்பாள் உடனுறை திருமூலநாதர் திருக்கோவிலுக்கு ஆதியோகி சிவன் ரத ஊர்வலம் வருகை தந்தது.வல்லநாடு திருமூலநாதர் பக்தர் பேரவையினர் சாது சிதம்பர சுவாமிகள் தன்னார்வலர் தொண்டர் குழுவினர் சிவனடியார்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆதியோகி சிவன் ரதத்தினைக் காணத் திரளாக வருகை தந்து தென்னாடுடைய சிவனே போற்றி என பக்தி கோஷமுழக்கமிட்டு வரவேற்றனர்.
ரத வருகையை முன்னிட்டுக்குறிச்சி பலவேசம் கோவிந்தம்மாள் குழுவினரின் திருவாசக முற்றோதுதல் நடந்தது


