ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரைச் சேர்ந்தவர் கருப்பசாமி மகன் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி வசந்தி. இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் குழந்தை இல்லை. இது தொடர்பாக கணவன் மனைவிக்குள் தொடர்ந்து பிரச்சனை இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக நேற்று மாலை இருவருக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டை விட்டு பாலசுப்பிரமணியன் மாலை 4 மணிக்கு வெளியேறி விட்டார்.
இந்த நிலையில் இன்று காலை ஆதிச்சநல்லூர் ரயில்வே தண்டவாளம் பகுதியில் ஆண்சடலம் ஒன்று ரயிலில் அடிப்பட்டு கிடப்பதாக அப்பகுதி மக்கள் போலிசாருக்கு தெரிவித்தனர். அப்போது போலிசார் வந்து பார்த்த போது ரயிலில் அடிப்பட்டு இறந்தவர் பாலசுப்பிரமணியன் என்பது தெரியவந்தது. இது தொடர்பாக திருநெல்வேலி ரயில்வே போலிசார் நேரில் வந்து உடலை மீட்டு ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பாக போலிசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
குழந்தை இல்லாத ஏக்கத்தில் ரயில் முன் ஒருவர் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


