
குற்றாலம் காசிமேஜர் புரத்தில் மார்கழி ஆயில்ய அகத்தியர் குருபூஜை பெருவிழா நடந்தது.
இந்த விழாவில் அகத்தியருக்கு சிறப்பு யாகம் , பூஜை மற்றும் வழிபாடு நடந்தது. இந்த விழாவில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு தாமிரபரணி தமிழ்தாசன் என்ற விருதையும், வில்லுபாட்டு மாதவிக்கு செந்தமிழ் சொற்செல்வி என்ற விருதும் வழங்கப்பட்டது.
இந்த விருதை மன்னார்குடி ஸ்ரீஸ்ரீ செண்டலங்கார செண்பக மன்னார் சம்பத் குமார் ராமானுஜ ஜீயர் சுவாமிகள் வழங்கினார். செங்கோல் மடஆதினம் திருக்கயிலாய பரம்பரை ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச சத்தியஞான தேசிக பராமாச்சரிய சுவாமிகள் தலைமை விகித்தார்.
புதுக்கோட்டை ஸ்ரீ புவனேஸ்வரி பிடம் பூஜ்ய ஸ்ரீ பிரணவானந்தர், சுவாமி சச்சிதானந்த நாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதற்கான ஏற்பாடுகளை அகத்தியர் ஜீவநாத பிரம்மசுவடி, அருள்வாக்கு சித்தர் ஸ்ரீ குருபரமாநந்தநாத் சு. முத்துகுமார் சாமி மற்றும் திருக்குற்றாலம் காசிமேஜர்புரம் அக்தியர் ஸ்ரீ தரம் சக்கர ஞானபீடம் மக்கள் செய்திருந்தனர்.


