செய்துங்கநல்லூரில் பேருந்தில் மூதாட்டியிடம் 8 பவுன் செயினை பறித்த 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகேயுள்ள வசவப்பபுரத்தை சேர்ந்தவர் தேவதாசன் மனைவி ஞானசுந்தரி(74). இவர் நேற்று நெல்லையில் இருந்து பேருந்தில் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி 2 பெண்கள் அவர் அணிந்திருந்த 8 பவுன் செயினை பறிக்க முயன்றுள்ளனர்.
இதனை பார்த்த ஞானசுந்தரி சுதாரித்துக் கொண்டு கூச்சலிடவே சக பயணிகள் 2 பெண்களையும் கையும் களவுமாக பிடித்து செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் அவர்கள், சின்னசேலம், காக்காதோப்பைச் சேர்ந்த அருள்பாண்டி மனைவி மீனாட்சி (30), கண்ணன் மனைவி முத்துமாரி (28) எனத் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலசார் கைது செய்தனர். இது குறித்து சப் இன்ஸ்பெக்டர் சதீஷ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


