வசவப்பபுரம் பேருந்து நிறுத்தம் அருகே நெடுஞ்சாலை துறையினரால் உயர்கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டது. மிக உயரமாக பிரமாண்டமாக அமைக்கப்பட்ட இந்த மின் விளகக்குக்கு கடந்த வாரம் மின் இணைப்பு கொடுக்கப்பட்டது. மின் இணைப்பு கொடுக்கப்பட்ட 2 நாளில் அனைத்து பல்ப் களும் வெடித்து சிதறி விட்டது. இது குறித்து இந்த பகுதியை சேர்ந்த சமூக சேவகர் வசவப்பபுரம் கணேசன் கூறும் போது, எங்கள் பகுதியில் உள்ள நாலுவழிச்சாலை பேருந்து நிலையத்தில் உயர் மின் கோபுர விளக்கு அமைத்தனர். எங்கள் பகுதி மக்கள் இதனால் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் இந்த மகிழ்ச்சி இரண்டு நாள் கூட நீடிக்க வில்லை. இந்த இடத்தில் உள்ள பல்புகள் அனைத்தும் வெடித்து சிதறி விட்டன. நல்லவேளை அங்கு நின்றவர்களுக்கு ஆபத்து எதுவும் ஏற்படவில்லை. இந்த இடத்தில் தரமான மின் பல்புகளை அமைத்து தரவேண்டும் என்று அவர் கூறினார்.
மாட்டிய இரண்டு நாளில் வெடித்து சிதறிய பல்பு, இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


