தூத்துக்குடி மாவட்டம், 20.10.1986 ல் உருவாக்கப்பட்டதை முன்னிட்டு 20.10.2022 அன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் சுத்தம் சுகாதாரம் என்பதற்கேற்ப சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில் காலை 06.00 மணி முதல் 09.00 மணி வரையிலும் அரசு அலுவலகங்களை சுத்தம் செய்து அதன் தொடர்ச்சியாக அலுவலக வளாகங்களில் மரங்கள் நடவும் அனைத்து அரசு அலுவலகங்களையும் அழகுபடுத்திடவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அனைத்து அரசு அலுவலகங்களிலும் 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி குறைதீர்க்கும் நாள் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட வேண்டும். பொதுமக்கள் இந்த முகாமில் தமது குறைகள் தொடர்பாக மனுக்கள் அளித்து பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேற்படி நாளில் பெறப்படும் மனுக்களுக்கு இரண்டு வாரங்களில் தீர்வு கண்டு அதற்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நவம்பர் மாதம் நடைபெற உள்ளது.
மேற்படி தினத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்களும் தங்கள் அலுவலகத்தை சுத்தமாக வைத்து மரம் நடும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து தனியார் நிறுவனங்களையும் கேட்டுக் கொள்ளப்படுகிறது என ஆட்சித்தலைவர் மரு.செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.


