தூத்துக்குடி திரு.வி.க நகர் சக்தி பீடத்தில் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு அன்னை ஆதிபராசக்தி ஸ்ரீ மகா சரஸ்வதி அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.
தூத்துக்குடி திரு.வி.க நகரில் அமைந்துள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் நவராத்திரி திருவிழா மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவின் முக்கிய நாளான சரஸ்வதி பூஜை அன்று, சக்தி பீடத்தின் கருவறையில் வீற்றிருக்கும் அன்னை ஆதிபராசக்தி சிறப்புத் திருமேனியுடன் ஸ்ரீ மகா சரஸ்வதி அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.

இதனைத் தொடர்ந்து அம்மனுக்குச் சிறப்புப் பூஜைகள் மற்றும் மகா தீபாராதனைகள் நடைபெற்றன. இத்திருவிழா பூஜையில் அப்பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்து அருள் பெற்றனர். அதனைத் தொடர்ந்து கோயிலில் கூடியிருந்த அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.


