தூத்துக்குடியில் தாய், தந்தை இறந்த துக்கத்தில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து காெண்டார்.
தூத்துக்குடி முத்தையாபுரம் காமராஜ் நகரைச் சேர்ந்தவர் தங்கராஜ் மகன் சுரேஷ் (38), இவருக்கு திருமணம் ஆகவில்லை. கடந்த ஆண்டு இவரது தந்தை மற்றும் தாய் இறந்து விட்டதால் தனியாக வசித்து வந்தாராம். இதனால் தனது அண்ணன் சுபாஷிடம் அம்மா அப்பா இறந்த பின்பு எனக்கு வாழ பிடிக்கவில்லை நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என்று பல தடவை கூறி வந்தாராம்.
அப்போது அவரது அண்ணன் நான் இருக்கிறேன் உன்னை பார்த்துக்கொள்கிறேன் என்று ஆறுதல் கூறினாராம். இந்த நிலையில் நேற்று இரவு சுரேஷ் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து சுபாஷ் முத்தையாபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பொறுப்பு ஷோபா ஜென்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


