பாளையங்கோட்டையில் விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் சிலைக்கு கனிமொழி கருணாநிதி எம்பி நாளை மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளார்.
விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை நீதிமன்றம் எதிரில் அமைந்துள்ள மணிமண்டபத்தில் அன்னாரது திருவுருவச்சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் சட்டமன்ற பேரவை தலைவர் மு.அப்பாவு தலைமையில், தூத்துக்குடி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வனத்துறை அமைச்சர் டாக்டர்.மா.மதிவேந்தன் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்தியூர் செல்வராஜ், சா.ஞானதிரவியம் சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர் துணை மேயர் ஆகியோர் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்கள்.


