தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் எஸ்பி பாலாஜி சரவணன் தலைமையில் இன்று “நல்லிணக்க நாள்” உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது.
நாடு முழுவதும் ஆகஸ்ட் 20ம் தேதி நல்லிணக்க நாளாக கடைபிடிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு இன்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் காவல்துறையினர் மற்றும் மாவட்ட காவல் அலுவலக அமைச்சுப்பணி நிர்வாக அலுவலர்கள், அலுவலக கண்காணிப்பாளர்கள் உட்பட அமைச்சுபணி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் முன்னிலையில் அனைத்து துறை அலுவலர்கள் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர். இதுபோல் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில், நல்லிணக்க நாள் தினத்தை முன்னிட்டு நல்லிணக்க நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் துணை ஆணையர் ராஜாராம், மாநகர பொறியாளர் பாஸ்கர் மற்றும் மாநகராட்சியின் அனைத்து பிரிவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


