தூத்துக்குடியில் பனிமய மாதா பேராலய திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர் பி.கீதா ஜீவன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (18.07.2024), 442வது தூய பனிமய மாதா பேராலய திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் தலைமையில், மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லோக. பாலாஜி சரவணன், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் லி.மதுபாலன், உதவி காவல் கண்காணிப்பாளர் (தூத்துக்குடி நகரம்) கேழ்கர் சுப்ரமணிய பால்சந்தரா,மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் ம.பிரபு, தூய பனிமய மாதா பேராலய அருள்தந்தை ஸ்டார்வின் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


