அணியாபரநல்லூரில் பாஜக 9 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக்கூட்டம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அணியாபரநல்லூரில் பாஜ கருங்குளம் வடக்கு ஒன்றியம் சார்பாக பாஜகவின் 9 ஆண்டு கால சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் இன்று நடந்தது.
இந்த கூட்டத்திற்கு பாஜக மாவட்ட பொதுச்செயலாளர் கிஷோர்குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் வக்கில் பிரபு, ஒன்றிய தலைவர் நங்கமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட விவசாய அணி திட்ட பொறுப்பாளர் செல்வின் சவான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் போது 75 பெண்களுக்கு இலவசமாக சேலை வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பாஜக மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்டச் செயலாளர் முருகன், சக்தி கேந்திரத்திற்கு உட்பட்ட நிர்வாகிகள் ஆன்மீகம் மற்றும் கோவில் மேம்பாட்டு பிரிவு ஒன்றிய தலைவர் விநாயகப்பெருமான், ஒன்றிய செயலாளர் குமார், இளைஞர் அணி ஒன்றிய தலைவர் சிலம்பரசன், சமூக ஊடகப்பிரிவு ஒன்றிய தலைவர் சின்னத்துரை, கிளைத் தலைவர் இசக்கிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.


