கயத்தாறு அருகே உள்ள அகிலாண்டபுரம் புனித ஞானப் பிரகாசியார் ஆலயத் திருவிழாவில் தேர்பவனி நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே உள்ள அகிலாண்ட புரம் கிராமத்தில் புனித ஞானப்பிரகாசியார் ஆலயத் திருவிழா கடந்த 10ம் தேதி மாலை 6 மணிக்கு பாளை மறைமாவட்ட திட்ட அலுவலர் தீபக் மைக்கேல்ராஜா தலைமையில் திருப்பலி நடைபெற்று கொடி ஏற்றம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தினமும் நற்கருணை, ஜெபமாலை, புனிதரின் திருவுருவப் பணி ஆகியவை நடைபெற்றது.
பத்தாம் திருநாளான நேற்று காலை தேர் பவனி நடைபெற்றது. பாளை மறைமாவட்ட பொறியாளர் அருட்தந்தை ஏ.ஜெ.எஸ். ராபின் கயத்தாறு பங்குதந்தைகள் எரிக்சோ, அற்புத ஜோசப் குமார், அருட்தந்தை பிரபு ஆகியோர் தலைமையில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜ் தேர்பவணியை தொடங்கி வைத்தார்.
இந்த தேர் பவனி முக்கிய ரதவீதிகள் வழியாக நடைபெற்றது. வழிநெடுகிலும் இறைமக்கள் புனித ஞானப்பிரகாசியருக்கு மாலை அணிவித்து உப்பு மிளகு காணிக்கையாக செலுத்தி வழிபட்டு சென்றனர்.இறுதியாக மாலை 6 மணிக்கு தலைமையில் மேல இலந்தைகுளம் பங்குதந்தை செயபாலன் நற்கருணை திருப்பலியுடன் கொடி இறக்கம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை விழா கமிட்டியார் மற்றும் இறைமக்கள் செய்திருந்தனர்.