தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று பாராளுமன்ற தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை தொடங்கியது. வாக்குச்சாவடி மையங்களில் பாதுகாப்பு பணிகளை எஸ்பி பாலாஜி சரவணன் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு இன்று காலை வாக்குப் பதிவு தொடங்கியது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். பாராளுமன்ற பொது தேர்தல் தூத்துக்குடி தொகுதியில் இன்று காலை காலை 7 மணிக்கு தொடங்கியது. மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும். தூத்துக்குடி தொகுதியில் பாராளுமன்ற மொத்தம் 1,624 வாக்குச்சாவடிகளில் 14,58,430 வாக்காளர்கள் இத்தேர்தலில் வாக்களிக்கவுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திற்குட்பட்ட 1624 வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்களுக்கான அடிப்படை வசதியான குடிதண்ணீர் வசதி, கழிப்பிட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க வசதியாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சாய்வுதளவசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, இந்நிலையில், பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் வாக்குசாவடி மையங்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் நேரில் சென்று தேர்தல் பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.
தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 3 காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் டி.எஸ்.பிக்கள், இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐக்கள், துணை இராணுவத்தினர், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், ஊர் காவல் படையினர், முன்னாள் இராணுவத்தினர், தீயணைப்பு படையினர், ஓய்வு பெற்ற காவல்துறையினர் உட்பட 3500 போலீசார் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


