வெள்ளூரில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்றத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பிலும், வருவாய்துறை சார்பிலும் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு பேரணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வெள்ளூர் ஊராட்சி மன்றம் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி இன்றைய தினம் நடந்தது. இந்த பேரணிக்கு ஊராட்சி மன்றத்தலைவர் குமார் பாண்டியன் தலைமை வகித்தார். ஊராட்சி செயலாளர் பண்டாரம், மகளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர் பிளாரிடா நவமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்காக பொதுமக்கள் 100 சதவீதம் வாக்காளர் விழிப்புணர்வை வலியுறுத்தும் விதமாக பதாகைகளை ஏந்தியவாறு வெள்ளூர் கிராமத்தில் உள்ள முக்கிய தெருக்கள் வழியாக விழிப்புணர்வு பேரணி நடந்தது. இந்த பேரணி சிவன் கோவில் முன்பு துவங்கியது. இதில் அப்பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.


