கருங்குளம் அங்காள பரமேஸ்வரி அம்மன் மிகவும் சிறப்பு வாய்ந்தது . இந்த கோயிலில் மகா சிவராத்திரி விழா மிகச்சிறப்பாக நடந்தது. இதையட்டி தாமிரபரணி ஆற்றில் இருந்து பக்தர்கள் பால் குடம் எடுத்து வந்தனர். யானை முன்னே வர ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டனர். பால் குடம் ஊர் சுற்றி வந்து கோயிலை வந்தடைந்தது. அதன் பின் அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிசேகம் நடந்தது. இரவு சிறப்பு பூஜைக்கு பிறகு அம்மன் சப்பரத்தில் பவனி வந்தார். அதன் பின் கோயிலில் வந்து பக்தர்களுக்கு தரிசனம் தந்தார். அப்போது குடம் மீது வாள் நிறுத்தும் அபூர்வ பூஜை நடந்தது. இந்த பூஜையை பரவசத்துடன் பக்கதர்கள் தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.


