சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் (ஜனவரி 19, 1933 – மார்ச் 24, 1988) தமிழ் கருநாடக இசைப் பாடகரும், திரைப்படப் பின்னணிப் பாடகரும் ஆவார்.
பெயர் : சி. கோவிந்தராசன்
பிறப்பு: 19 ஜனவரி 1933
இறப்பு: 24 மார்ச் 1988.
பெற்றோர்: சிவசிதம்பரம், அவையாம்பாள்
பிறப்பிடம்: சீர்காழி
ஆரம்பக் கல்வி: வாணிவிலாஸ் பாடசாலை, சீர்காழி
இளமைப் பருவத்தில் விரும்பிப் பாடிய பாடல்கள் சில:
• தியானமே எனது – தியாகராஜ பாகவதர் பாடிய பாடல்
• வதனமே சந்திர பிம்பமோ – தியாகராஜ பாகவதர் பாடிய பாடல்
• செந்தாமரை முகமே – பி. யூ. சின்னப்பா பாடிய பாடல்
• கோடையிலே இளைப்பாறி- எல். ஜி. கிட்டப்பா பாடிய பாடல்
இளம் வயதில் நடிகராக பணியாற்றிய நிறுவனங்கள்:தேவி நாடக சபா, பாய்ஸ் கம்பெனி
இசைக்கல்வி: சென்னை இசைக்கல்லூரி
இசை வாழ்வின் ஆரம்பத்தில் பெற்ற பட்டங்கள்: இசைமணி, சங்கித வித்வான்
பிடித்த ராகங்கள்: லதாங்கி, கல்யாணி, சங்கராபரணம்
திரைப்படத்துக்காக பாடிய முதல்பாடல்: 1953 இல் பொன்வயல் என்ற படத்துக்காக சிரிப்புத் தான் வருகுதைய்யா எனத்தொடங்கும் பாடல்,ஆனால் அந்த பாடலுக்கு முன்பே ஜெமினி நிறுவனம் தயாரித்த ஔவையார் திரைப்படத்திற்காக ஆத்திச்சூடியை பாடினார். திரைப்படத்தில் சீர்காழியார் பெயர் வெளியிடப்படவில்லை.
• பட்டணந்தான் போகலாமடி – படம்: எங்க வீட்டு மகாலெட்சுமி, இசை:எம்.வேணு
• மாமியாளுக்கு ஒரு சேதி – படம்: பனித்திரை
• காதலிக்க நேரமில்லை – படம்: காதலிக்க நேரமில்லை
• ஆசைக்கிளியே கோபமா- சபாஷ் மீனா (இதற்கு நடித்தவர் சந்திரபாபு)
சக்ரவர்த்தித் திருமகள், புதுமைப் பித்தன் மற்றும் ராஜராஜன் போன்ற படங்களில் எம்.ஜி.ஆருக்கான அனைத்து பாடல்களையும் இவரே பாடியிருந்தார்.
• நிலவோடு வான்முகில், இதயம் தன்னையே (ராஜராஜன் 1957)
• எல்லை இல்லாத இன்பத்திலே – (சக்கரவர்த்தி திருமகள்)
• உழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா -(நாடோடி மன்னன் 1958)
• வண்டு ஆடாத சோலையில் , ஒன்றல்ல இரண்டல்ல தம்பி (தாய் மகளுக்கு கட்டிய தாலி 1959)
• சிரிப்பது சிலபேர், யாருக்கு யார் சொந்தம் என்பது (சபாஷ் மாப்பிள்ளை1961)
• ஓடிவந்து மீட்பதற்கு (நான் ஆணையிட்டால்) – ஆலங்குடி சோமு இயற்றிய பாடல்
• யாருக்கு யார் சொந்தம் என்பது (சபாஷ் மாப்பிளே)
• ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் (நல்லவன் வாழ்வான்)
• கண்ணன் வந்தான் (படம்: ராமு)(உடன் பாடியவர்: டி. எம். சௌந்திரராஜன்)
• தேவன் வந்தான் (படம்: குழந்தைக்காக) (உடன் பாடியவர்: டி. எம். சௌந்திரராஜன் மற்றும் பி. பி. ஸ்ரீனிவாஸ்)
• வெள்ளிப் பனிமலையின் (படம்: கப்பலோட்டிய தமிழன்) (உடன் பாடியவர்: திருச்சி லோகநாதன்)
• இரவு நடக்கின்றது (உடன் பாடியவர்: டி. எம். சௌந்திரராஜன்)
• ஆயிரம் கரங்கள் நீட்டி (படம்: கர்ணன்) (உடன் பாடியவர்: டி. எம். சௌந்திரராஜன், பி. பி. ஸ்ரீனிவாஸ்)
விருதுகள்
சங்கீத நாடக அகாதமி விருது, 1980[1]
• இசைப்பேரறிஞர் விருது, 1984. வழங்கியது: தமிழ் இசைச் சங்கம், சென்னை


