தூத்துக்குடியில், தாயுமானவர் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் தாயுமானவர் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அந்நிகழ்வின் போது வருவாய் வட்டாட்சியர் ஸ்டாலின், வட்ட வழங்கல் அலுவலர் ஞானராஜ், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் முருகேஸ்வரி, மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், பகுதி செயலாளர் ரவீந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


