ஸ்ரீவைகுண்டம் வட்டார வேளாண்மை உழவர் நலத்துறையின் கீழ் மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டம் அட்மா சார்பில் ஸ்ரீவைகுண்டம் வட்டார விவசாயிகளை வாகைகுளம் ஸ்காட் வேளாண் அறிவியல் மையத்திற்கு மாவட்ட அளவிலான விவசாயிகள் அறுவடை பின்சார் தொழில்நுட்பங்கள் மற்றும் மதிப்பு கூட்டுதல் என்ற தலைப்பில் கண்டுநர் சுற்றுலாவாக அழைத்து செல்லப்பட்டனர்.
இந்த கண்டுநர் சுற்றுலாவில் விவசாயிகளுக்கு நமது பகுதியில் பெருவாரியாக விளையும் நெல் மற்றும் வாழை பயிருக்கான அறுவடை பின்சார் தொழில்நுட்பங்களையும் மேலும் ஆண், பெண் விவசாயிகள் பயன்பெறும் வகையில் வாழையில் உள்ள மதிப்பு கூட்டப்படும் பொருட்கள் செய் முறைகள் மற்றும் சந்தைப்படுத்தும் நிலவரங்கள் பற்றி வேளாண் அறிவியல் மையத்தில் மனையியல் தொழிலநுட்ப மேலாளர் சுமதி விவசாயிகளுக்கு விளக்கமாக எடுத்துரைத்தார்.
சுற்றுலாவில் வேளாண் அறிவியல் மையத்தின் மூலம் பயிற்சி பெற்று தயாரிக்கப்பட்ட பல்வேறு மதிப்பூட்டப்பட்ட பொருட்களை விவசாய பெருமக்களுக்கு காண்பித்து ஊக்கப்படுத்தினார். இதில் பல்வேறு விவசாயிகள் தங்களுக்குள்ள சந்தேகங்களை கேட்டறிந்தனர்.
கண்டுநர் சுற்றுலாவில் கலந்து கொண்டு விவசாயிகள் சுற்றுலா மிகவும் பயனள்ளதாகவும், எதிர்காலத்தில் மதிப்புக்கூட்டுதல் தொழிலில் ஈடுபடுவதற்கு ஊக்கமளித்தாகவும் அமைந்தது என கூறினர். இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீவைகுண்டம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் வனஜாதேவி, வட்டார தொழில்நுட்ப மேலாளர் அட்மா இசக்கிராணி, உதவி தொழில்நுட்ப மேலாளர் ஆனந்தி, அசோக் அய்யாசாமி ஆகியோர் செய்திருந்தனர்.


