ஸ்ரீவைகுண்டம் பகுதியில் நேற்று இரவு பெய்த பலத்த மழையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் நீரில் மூழ்கியது.
வடகிழக்கு பருவ மழை தொடங்கி உள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் மழையானது பெய்து வருகிறது. கடந்த ஒரு வார காலமாக தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை முதல் இரவு வரை பெய்த கன மழை காரணமாக தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பேரூர், பராக்கிரமபாண்டி, சாமியாத்து பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் நீரில் மூழ்கியது. மேலும் நடப்பட்டிருந்த நாற்றுகளும் நீரில் மூழ்கியது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.


