சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்” என்பது பழமொழி, அதாவது சஷ்டியில் விரதமிருந்தால் கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பது பொருள்.
சஷ்டி விரதம் இருந்தால் நம் உள்ளத்தில் இறைவன் குடி கொள்வான் என்ற பொருளும் உண்டு.
கந்தவேல் சூரபத்மனை வெற்றி கொண்ட நாளே கந்த சஷ்டி. இன்று அந்த சம்ஹாரம்.
நமது உள்ளத்தில் ஆட்சி செய்யும் கோபம், காமம், பொறாமை, ஆசை, வஞ்சகம் முதலிய சூரபதுமனை முருகன் ஞான வேலினால் அழித்து, பேரின்பம் எய்தும் குறிப்பே சூரசம்ஹாரத்தின் சரியான பொருள்.
காரண காரியத்துடன் எதையும் செய்வதுதான் சனாதனம். கந்த சஷ்டி கற்று கொடுக்கும் பாடம் கொஞ்சம் நஞ்சம் அல்ல.
ஆன்மீக ரீதியாகவும் சரி ,அறிவியல் ரீதியாகவும் சரி பல விஷயங்களை கந்த சஷ்டி நமக்குக் கற்றுத் தருகிறது.
அம்மாவாசை பின் வரும் ஆறாம் நாள் சஷ்டி என்பதாகும். தீபாவளிக்கு பின் வரும் அம்மாவாசையின் ஆறாம் நாள் கந்த சஷ்டி ஆகும்.
அம்மாவாசைக்கு பின் வரும் ஆறாம் நாள் அரை நிலவு, வசீகரிக்கும் உருவத்துடன் காணப்படுவது இயல்பு. அது சரி முருகன் என்றால் அழகுதானே.
இதில் இன்னொரு தத்துவமும் ஒழிந்திருக்கிறது. அரை நிலவு நாளன்று இவ்வுலகில் அனைத்துமே மிக எதார்த்தமாக இருக்கும்.
பொதுவாக அரைநிலவு நாளன்று நிலவில் இருந்து வெளிப்படும் ஈர்பு விசையானது அளவோடு இருக்கும். அதனால் இயற்கையும் சீற்றமில்லாமல் அழகாக இருக்க்கும்
கந்து + அன் = கந்தன், கந்து என்றால் யானையை பிணைக்கும் கோல் அல்லது தூண்.
அதாவது அடங்காமல் தான், நான் என்ற மமதையில் தரிகட்டுத் திரியும் மனதை அடக்கி இறையோடு கட்டுதல் என்று பொருள்.
அதனாலேயே ஆறுமுகனுக்கு கந்தன் என்று பொருள்,மற்றொறு பொருள் கந்து என்றால் பகவனுடைய வலிமையை வற்ற செய்பவன் என்று பொருள்.
வரம் இருக்கிறது என்ற மமதையில், தான் என்ற எண்ணம் மேலோங்க தரிகட்டுத் திரிந்த சூரபத்மனை வதம் செய்து தன்னோடு இனைத்துக் கொண்டதால் இந்த நாள் கந்த சஷ்டி திருநாள் ஆனது.
சூரபத்மனுடன் 6 நாள் யுத்தம் நடந்தது, எனவேதான் 6 நாள் விரதம் பேணப்பட்டு 6 வது நாளில் விரதம் முடித்துக் கொள்ளப்படுகிறது.
சம் + ஹாரம் = சம்ஹாரம், சம் என்றால் அழகு, அன்பு, சுத்தம், நன்மை, பிறப்பு, வெற்றி ஆகும். அதாவது இத்தனையையும் நல்குவதே சம்ஹாரம் எனப்படுவதாகும்.
தீயவை அழியும் போது தான் இத்தனையும் நமக்கு கிடைக்கும். தீயவை என்றால் என்ன “நான்” என்ற அகந்தைதான்.
ஆக இத்திருநாளில் நாம் இறைவனிடம் இருந்து அழகு, அன்பு, சுத்தம், நன்மை, பிறப்பு, வெற்றி என்று சகலத்தையும் வேண்டிப் பெருகிறோம்.
அது மட்டுமல்லாமல் ஈசனின் ஆறு முகத்தையும் (தத்புருஷம், அகோரம், வாமம், சத்யோஜாதம், ஈசானம், அதோமுகம்) ஒருசேர முருகப் பெருமான் வடிவில் கான்கிறோம்.
இந்த இனிய சஷ்டி விரத சம்ஹாரா நாளான இன்று முருகன் திருவடி வணங்கி சகல சௌபாக்கியங்களையும் பெறுவோம்.
இன்றோடு நம்மை பீடித்த பீடைகள் அகலட்டும், அன்பே பிரதானம் ஆகட்டும். சகல பாவங்களும் அகன்று சம்ஹாரா மூர்த்தியின் இறையருள் கிடைக்கட்டும்.
முருகா சரணம்…


