தூத்துக்குடியில் வ.உ.சிதம்பரனாரின் நினைவு தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தூத்துக்குடியில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் நினைவு தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மற்றும் ஐஎன்டியூசி மாநில பொது செயலாளர், மாநில பொதுக்குழு உறுப்பினர் பெருமாள்சாமி ஏற்பாட்டின் பேரில் அமைப்புச்சாரா தொழிலாளர் காங்கிரஸ் மாநில ஒருங்கிணைப்பாளர் டி.ஜெயக்கொடி அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுததினார்.
இந்நிகழ்ச்சிக்கு வர்த்தக காங்கிரஸ் தெற்கு மாவட்ட தலைவர் டி.டேவிட் பிரபாகரன், டி.சி.டி.யு மாவட்ட தலைவர் ஆடிட்டர் சிவராஜ் மோகன், மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துவிஜயா, மாநகர் செயலாளர் இக்னேஷியஸ், கலைபிரிவு தலைவர் பெத்துராஜ், மாநில செயலளர் பழங்குடியினர் பிரிவு முனியசாமி , எஸ் சி பிரிவு மாவட்டத் தலைவர் ராஜாராம், சேகர் பேரைய்யா, மண்டல தலைவி உமா மகேஸ்வரி, எஸ் சி பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.பிரபு,இளைஞர் காங்கிரஸ் பொது செயலாளர் ஜெயமணி, ஊடக பிரிவு சுந்தர் ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


