தூத்துக்குடியில் வ.உ.சி., நினைவு தினத்தை முன்னிட்டு கீழூர் திருநாவுக்கரசு மடாலயம் நிர்வாகிகள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தியாகச்செம்மல் வ. உ. சிதம்பரம்பிள்ளை அவர்களின் 87 வது நினைவு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி கீழூர் திருநாவுக்கரசு மடாலயம் அருகில் உள்ள வ.உ.சிதம்பரனார் திருவுருவ சிலைக்கு திருநாவுக்கரசு மடாலய தலைவர் ஜானகி ராமன் தலைமையில் மடாலய செயலாளர் துரை கந்தசாமி பொருளாளர் சிங்காரவேல் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


