கன்னியாகுமரியிலிருந்து சேலத்துக்கு செல்லும் திமுக இருசக்கர வாகனப் பேரணிக்கு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சாா்பில் வரவேற்பளிக்கப்பட்டது.
திமுக இளைஞரணியின் 2 ஆவது மாநில மாநாடு, சேலத்தில் வரும் டிசம்பா் 17 ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி இருசக்கர வாகனப் பேரணி கன்னியாகுமரியிலிருந்து தொடங்கி சேலத்தில் முடிவடைகிறது. இப்பேரணியை கன்னியாகுமரியில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் கடந்த 15ஆம் தேதி தொடங்கி வைத்தாா்.
இப்பேரணி, தூத்துக்குடி மாநகா் பகுதிக்கு வெள்ளிக்கிழமை வந்தது. அப்போது, மாவட்ட திமுக அலுவலகமான கலைஞா் அரங்கில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் சி.எம். மதியழகன் தலைமையில் வரவேற்பளிக்கப்பட்டது. இதில், துணை அமைப்பாளா்கள் பிரதீப், மகேந்திரன், ராதாகிருஷ்ணன், ஜோசப் அமல்ராஜ், பாரதி ரவிக்குமாா், மாநகா் அமைப்பாளா் அருண்சுந்தா், துணை அமைப்பாளா் ரவி உள்பட பலா் பங்கேற்றனா்.


