தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் TRB பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய (TRB) அறிவிக்கையில் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், வரலாறு மற்றும் புவியியல் போன்ற பாடங்களுக்கான பட்டதாரி ஆசிரியர் 2222 காலிப்பணியிடங்களுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான போட்டித் தேர்வு 07.01.2024 அன்று நடத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது வரம்பு 53 வயது (பொது பிரிவினர்) மற்றும் 58 வயது (இதர பிரிவினர்) ஆகும். மேலும் TET PAPER II தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2023. மேலும் விவரங்களை www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம்.
இத்தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு தூத்துக்குடி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் 17.11.2023 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு தொடங்கப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்பு வார இறுதி நாட்களில் (சனி மற்றும் ஞாயிறு) நடைபெறும். இப்போட்டித் தேர்வுகளுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் அலுவலக நூலகத்தில் உள்ளது. மேலும் வாரம்தோறும் இலவச மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும்.
மேலும் 17.11.2023 அன்று நடைபெறும் அறிமுக வகுப்பிற்கு தூத்துக்குடி கோரம்பள்ளத்தில், அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு PASSPORT SIZE புகைப்படம் மற்றும் TET PAPER II தேர்வில் தேர்ச்சி பெற்ற சான்றிதழ் நகல் ஆகியவற்றுடன் நேரில் வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. பயிற்சி வகுப்பு குறித்த கூடுதல் தகவல்களை Thoothukudi Employment Office எனும் TELEGRAM CHANNEL-இல் இணைந்து அறிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 0461 – 2340159 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். TRB பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வுக்கு தயாராகும் போட்டித் தேர்வு ஆர்வலர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொள்கிறார்.


