திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொல்பொருள் ஆராய்ச்சி மைய இயக்குநர் பேராசிரியர் சுதாகர் சிவசுப்பிரமணியம் என்பவர் திருச்செந்தூரில் இருந்து வீரபாண்டியபட்டணம் வழியாக கடற்கரை வழியை கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது திருச்செந்தூருக்கும், வீரபாண்டிய பட்டணத்திற்கும் இடையே சுமார் 200 மீட்டரில் ஒரு சுவர் போன்ற அமைப்பை கண்டுபிடித்துள்ளார்.
பாண்டியர் காலத்தில் கொற்கை துறைமுகம் மிகவும் சிறப்பு பெற்று இருந்துள்ளது. மேலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் ஏற்றுமதி இறக்குமதி சார்ந்த பணிகள் நடந்துள்ளது. மேலும் கொற்றை துறைமுகம் பகுதியில் வெளிநாட்டு பயணிகள் வந்து சென்றுள்ளனர். அவர்கள் இந்த பகுதியில் உள்ள இடங்களை ரசித்துள்ளனர். இதற்கு ஆதாரமாக பல்வேறு நூல்கள் உள்ளது.
இந்த இடத்தில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த சுவரா அல்லது நடைபாதையாக பயன்படுத்தப்பட்டதா என்ற விபரம் தெரியவில்லை. இதனை பார்க்கும் போது மிகவும் நேர்த்தியாக மனிதர்களால் உருவாக்கப்பட்டது போல் தெரிகிறது. ஒரு வேளை பண்டைய காலத்தைச் சேர்ந்ததாக இருப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளது. எனவே தொல்லியல் துறையினர் இந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து இதுகுறித்த தகவல் தெரிவித்தால் நமது தமிழனின் பண்பாடுகள் தெரிவதற்கு வாய்ப்பாக அமையும்.
மேலும் கடந்த மாதம் தமிழக தொல்லியல் துறை சார்பில் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து திருச்செந்தூர் வரை கடல்சார் ஆய்வு மேற்கொள்வதற்காக முன்கள ஆய்வு ஒரு கப்பலில் ஆய்வாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் மூலம் நடந்தது. அந்த ஆய்வில் இந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதா அல்லது இதனை முறையாக ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.


