தூத்துக்குடி மாவட்டத்தில் மழைக்காலம் தொடங்கும் முன்பே உப்பளத் தொழிலாளர்களின் மழைக்கால நிவாரண உதவித்தொகை ரூ.6,37,40,000 அரசால் விடுவிக்கப்பட்டு பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்பட்டது என்று மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்தார்.
தமிழ்நாடு உப்பளத் தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள உப்பளத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு மழைக்கால நிவாரண நிதியாக தலா ரூ.5000/-வழங்கும் திட்டம் கடந்த 2022-ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கப்பட்டது.
ஆதனை தொடர்ந்து இந்த ஆண்டுக்கான உப்பளத் தொழிலாளர்களின் மழைக்கால நிவாரண உதவித்தொகை 16,562 குடும்பங்களுக்கு தலா ரூ.5000/- வீதம் மொத்தம் ரூ.8,28,10,000/- வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் ஆணையிடப்பட்டதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் இவ்வாண்டுக்கான உப்பளத் தொழிலாளர்களின் மழைக்கால நிவாரண உதவித் தொகை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அவர்களின் வேண்டுகோளின்படி தமிழ்நாடு உப்பளத் தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு தலா 5000 வீதம் மழைக்கால நிவாரண நிதி ரூ.6,37,40,000/- மழைக்காலம் தொடங்கும் முன்பே அரசால் விடுவிக்கப்பட்டு பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக அக்.17ம் தேதி செலுத்தப்பட்டது என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளார்.


