நாசரேத் அருகே ஆயுதங்களுடன் நின்று பொதுமக்களை அச்சுறுத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகே நெய்விளை கிராமத்தை சேர்ந்தவர் மாயாண்டி மகன் பாலசதீஷ் (23). சம்பவத்தன்று இவர் நெய்விளை பஸ் நிறுத்தம் அருகே பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் நின்று கொண்டிருந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த நாசரேத் எஸ்.ஐ.சுந்தரம் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பால சதீஷ்குமாரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


