தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் வரும் 29ஆம் தேதி மாநில அளவிலான செஸ் போட்டிகள் நடைபெற உள்ளது.
இது குறித்து தூத்துக்குடி காமராஜ் கல்லூரி மற்றும் தூத்துக்குடி மாவட்ட சதுரங்க கழகம் சாா்பில் வெளியிட்ட அறிக்கையில் “மாநில அளவிலான செஸ் போட்டி தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் வரும் 29ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இப்போட்டியில் தமிழகத்தைச் சோ்ந்த அனைவரும் பங்கேற்கலாம்.
இதில், 9 வயதுக்குள்பட்டோா், 11 வயதுக்குள்பட்டோா், 13 வயதுக்குள்பட்டோா், 15 வயதுக்குள்பட்டோா் என 4 பிரிவுகளாக பள்ளி மாணவா்-மாணவிகளுக்கும், பொதுப்பிரிவாக அனைத்து வயதினருக்கும் என ஐந்து பிரிவுகளாக நடைபெற இருக்கிறது. மாணவா்- மாணவிகள் பிரிவில் பங்குபெறும் அனைவரும் வயதுக்கான சான்றிதழ் சமா்ப்பிக்க வேண்டும்.
நுழைவுக் கட்டணம் செலுத்தி பெயரைப் பதிவு செய்வதற்கு வரும் 26ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.இதில், சிறப்பிடம் பெறுவோருக்கு பரிசுகள், கோப்பைகள் வழங்ப்படவுள்ளன. மேலும் பங்கேற்போா் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவா்- மாணவிகள் நுழைவுக் கட்டணமாக ரூ.150 மட்டும் செலுத்தி போட்டியில் பங்குபெறலாம். மற்ற அனைவரும் நுழைவுக் கட்டணமாக ரூ.300 செலுத்த வேண்டும். இதை இணையதளங்களில் செலுத்தலாம். மேலும் விவரங்களுக்கு 98658 30030, 89257 88874, 98945 42121, 94877 03266, 98946 90574, 96983 95983 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


