கோவில்பட்டியில் ரூ.6.27 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணியினை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம், உருளைகுடி ஊராட்சி, பீக்கிலிபட்டி கிராம முதல் சங்கராபுரம் கிராமம் வரை திருநெல்வேலி நபார்டு நெடுஞ்சாலை கிராமப்புற சாலை திட்டத்தின் கீழ் ரூ.6 கோடியே 27 லட்சத்து 53 ஆயிரம் மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணியினை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார். நிகழ்விற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் தலைமை வகித்தார்.
நெடுஞ்சாலை துறை நபார்டு மற்றும் கிராமச்சாலைகள் கோட்ட பொறியாளர் யூஜின்,உதவி கோட்ட பொறியாளர் தர்மராஜா, உதவி பொறியாளர்கள் பிரேம்சங்கர், லோகராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ்குமார் ஊராட்சி மன்ற தலைவர் பீக்கிலிபட்டி முருகேசன் ஒன்றிய செயலாளர்கள் நவநீதகண்ணன் ராதாகிருஷ்ணன், சின்னமாரிமுத்து, ராமசுப்பு தலைமை செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


