தூத்துக்குடியில் அதிமுக பொன் விழா ஆண்டையொட்டி எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 50வது ஆண்டு (பொன் விழா) துவக்க விழாவை அக்கட்சியினர் இன்று உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி மாவட்ட அதிமுக, சார்பில் தூத்துக்குடி மார்த்தாண்டன் பட்டி சத்திரம் அருகில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சிவன் கோயில் முன்பு தேரடி சந்திப்பில் வைத்து பிரமாண்ட கேக் வெட்டி கொண்டாடபட்டது. பழைய மாநகராட்சி வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தூத்துக்குடி சிதம்பர நகர் 4வது தெருவில் உள்ள அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் சித செல்லப்பாண்டியன் அலுவலகம் முன்பு புதியதாக நிறுவப்பட்ட கொடி கம்பத்தில் கழக கொடியினை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கப்பட்டது. விழாவில் மாவட்ட பொருளாளர் அமலி ராஜன், தெற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் ஏசாதுரை, பகுதி செயலாளர்கள் சேவியர், ராமகிருஷ்ணன், முருகன், கருங்குளம் ஒன்றிய செயலாளர் செங்கான், எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் ஜோதிமணி, நட்சத்திர பேச்சாளர் கருணாநிதி, முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், வடக்கு மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் ஜீவா பாண்டியன், முன்னாள் நகர அவைத்தலைவர் எம் பெருமாள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நீலமேகவர்ணம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


