தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.1,71,360 மதிப்பில் நல உதவிகளை ஆட்சியர் கி.செந்தில்ராஜ் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தலைமையில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று (18.07.2022) நடைபெற்றது. கூட்டத்தில், பொது மக்களிடமிருந்து கல்வி உதவித் தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித் தொகை, விதவை உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 300 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார். மேலும், தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதியின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி மரணமடைந்த 1 நபரின் வாரிசுதாரருக்கு ரூ.1 இலட்சத்திற்கான காசோலை, 9 பேருக்கு ரூ.1,36,080/- மதிப்பில் வரன்முறை பட்டா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 5 பேருக்கு ரூ.1,71,360/- மதிப்பில் கருவிகள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்கள்.
Asian Equipped Power lifting Championship 2022 (Open, Sub Junior, Junior, Senior & Masters Men & Women) போட்டிகள் கோயம்புத்தூரில் வைத்து 17.06.2022 முதல் 21.06.2022 வரை நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த சின்னத்துரை என்பவர் கலந்து கொண்டு Bench Press, Dead lift, Squat ஆகிய மூன்று பிரிவிலும் 3 தங்கப்பதக்கமும் மற்றும் Overall Championship தங்கப்பதக்கமும் பெற்று சாதனை படைத்துள்ளார். மேற்படி வீரரை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், பாராட்டினார்கள்.
இக்கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர் (வருவாய்) சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மகளிர் திட்ட இயக்குநர் வீரபத்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அமுதா, சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் ஜேன் கிறிஸ்டி பாய், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் (பொ) ந.ஆ.ஜெயரத்தினராஜன் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


