ஸ்ரீவைகுண்டம் அணையில் பேய்க்குளத்திற்கு தண்ணீர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ராகவன், செயலாளர் புவிராஜ், பொருளாளர் இராமசுப்பு மற்றும் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு: ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையில் அமைந்துள்ள வடகால் பேய்குளம் குறிப்பாக பேய்குளம் 7, 8, 9, 10 பாசன மடைகளுக்கு தொடர்ந்து பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்கவில்லை. பொதுபணித் துறை நிர்வாகம் ஸ்ரீவைகுண்டம் அணையின் வடகாலுக்கும் தென்காலுக்கும் பாசனத்திற்கு மாற்றி மாற்றி தண்ணீர் வழங்கி வருகிறார்கள்.
இந்தமுறை 15.07.2022 முதல் வடகாலுக்கு தண்ணீர் வழங்கியிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு வடகாலுக்கு தண்ணீர் வழங்காமல் வேறு பகுதிக்கு தண்ணீரை கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஏற்கனவே பயிர்கள் வாடிக் கொண்டிருக்கும் சூழலில் தற்போதும் பயிர்களுக்கு தண்ணீர் இல்லையென்றால் பயிர்கள் மிகுந்த சேதத்திற்கு உள்ளாகும். இதனால் இப்பகுதி விவசாயிகள் மிகவும் வருத்தத்திலும் கவலையில் உள்ளனர். எனவே பாபநாசம் – மணிமுத்தாறு அணைகளிலிருந்து கூடுதலாக தண்ணீர் திறந்து பேய்குளம் 7, 8, 9, 10 பாசன மடைகளுக்கு தண்ணீர் கிடைத்திட ஆவன செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


