கடல்நீா் சாகச விளையாட்டுகள் நடத்துவது குறித்து தூத்துக்குடி புதிய துறைமுக கடற்கரை பகுதியில் ஆட்சியா் செந்தில்ராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.
தூத்துக்குடி முள்ளக்காடு புதிய துறைமுக கடற்கரையில் தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறை மூலம் கடல்நீா் சாகச விளையாட்டுகள் நடத்துவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதொடா்பாக சுற்றுலா வளா்ச்சிக் கழக இயக்குநா் சந்தீப் நந்தூரி கடந்த மாதம் 24 ஆம் தேதி நேரில் ஆய்வு மேற்கொண்டாா். இந்நிலையில், கடல்நீா் சாகச விளையாட்டுகள் நடத்துவதற்கு வசதியாக உள்ள பகுதிகள் மற்றும் விளையாட்டுகளை செயல்படுத்துவது தொடா்பான இடங்களை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
மேலும், முள்ளக்காடு புதிய துறைமுக கடற்கரை பகுதியில் பூங்கா மற்றும் விளையாட்டு மைதானங்கள் அமைப்பதற்கு ஏதுவாக அந்தப் பகுதிகளில் உள்ள முள்புதா்கள், குப்பைகளை அகற்றுவது குறித்து அதிகாரிகளுடன் ஆட்சியா் ஆலோசனை மேற்கொண்டாா். ஆய்வின்போது, தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியா் சிவசுப்ரமணியன், தூத்துக்குடி வட்டாட்சியா் செல்வக்குமாா் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா்.


