திருநெல்வேலியில் இருந்து படுக்கப்பத்திற்கு நேற்று இரவு சுமார் 8.30 மணி அளவில் தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சுப்பிரமணியபுரம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது திடீரென மர்ம நபர்கள் வண்டியை நிறுத்தி முன்பக்க கண்ணாடியை கம்பு மற்றும் இரும்பு கம்பியால் உடைத்து விட்டு அங்கிருந்து சென்றனர். இது குறித்து தனியார் பேருந்து ஓட்டுனர் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த நிலையில் தொடர்ந்து குற்றாலம் செல்வதற்காக வந்த டூரிஸ்ட் வேன் கண்ணாடியும் அதே இடத்தில் உடைக்கப்பட்டது. இதற்கிடையில் அதன் பின்னால் வந்த ஆட்டோவின் கண்ணாடியும் உடைக்கப்பட்டது. இது தொடர்பாக தகவல் அறிந்தவுடன் ஸ்ரீவைகுண்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அதற்குள் அங்கிருந்து மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
சம்பவம் குறித்து தனியார் பேருந்து ஓட்டுனர் ராமகிருஷ்ணன் மற்றும் டூரிஸ்ட் வேன் ஓட்டுநர் பரமசிவன் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் இடம் ஸ்ரீவைகுண்டம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அதில் ஏழு பேர் கொண்ட மர்ம கும்ப கும்பல் கண்ணாடியை உடைத்ததாக ஓட்டுநர்கள் தெரிவித்தனர்.
ஓட்டுநர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளியில் இன்றைய தினம் நடைபெற்ற போராட்டம் எதிரொலியாக வாகனங்கள் உடைக்கப்பட்டதா அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி வெங்கடேசன் தலைமைலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


