இன்றைய தினத்தந்தி நாளிதழில் நான் எழுதிய கரிசல்காட்டு ஜமீன்தார்கள் நூல் விமர்சனம் வெளிவந்துள்ளது. விமர்சனம் வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும், ஆசிரியருக்கும் மிக்க நன்றி – அன்புடன் எழுத்தாளர்முத்தாலங்குறிச்சி காமராசு
கரிசல்காட்டு ஜமீன்தார்கள்
கரிசல் காடு பரந்த பூமி என்றாலும், அதிலுள்ள இளையரசனேந்தல் குருவிகுளம் ஆகிய இரண்டு ஜமீன்கள் பற்றிய முழுமையான தகவல்களை இந்த நூல் தாங்கியிருக்கிறது. கட்டபொம்மனை தூக்கிலிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பிரிந்தாலும் சூழ்ச்சியாக இளையரசனேந்தல் ஜமீனை ஆங்கிலேயர்கள் இரண்டாகப் பிரித்தார்கள் என்றும் இப்போதும் அங்கே வெளிநாட்டு குளிர்பானங்கள் காணப்படுவது இல்லை என்றும் இந்த நூலில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. குருவிகுளம் ஜமீன் அரண்மனை இப்போது தீப்பெட்டி கம்பெனியாக உள்ளது என்பதும் இதில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இரண்டு ஜமீன்கள் பற்றிய வியப்பான செய்திகளுடன் அரிய புகைப்படங்களும் இணைக்கப்பட்டு இருப்பதால், அந்த ஜமீன்களின் கடந்த கால வரலாற்றை ரசித்து பார்க்க முடிகிறது.
ஆசிரியர்: முத்தாலங்குறிச்சி காமராசு
வெளியீடு: காவ்யா
விலை: ரூ 270
செல்போன்: 98 404802 32


